ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?
*ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?*
👇👇👇👇👇👇👇
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. *ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.*
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3330.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
மேற்கண்ட ஹதிஸ் ஹவ்வா என்ற முதல் பெண்ணின் டைப்பு பற்றி பேசுகிறது ஆதி பாவம் இதில் இல்லை
மேலும் ஆதி முதல் பெண் ஹவ்வா அவர்களுக்கும் உலக பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்வென்றால் ....
நபி ஸல் பெண்களின் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், *விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும்* நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி 3331)
*முதல் மனிதர் ஆதம் அலை அவர்களின் இடதுபக்க விலா எலும்பை எடுத்து அவர் மனைவியைப் படைத்ததாக மேற்கண்ட நபிமொழியில் உள்ளது உலகில் உள்ள எல்லா பெண்களும் வளைந்த எலும்பாகிய விலா எலும்பில் இருந்தே படைக்க பட்டு உள்ளார்கள்*
*வளைந்த எலும்பாகிய விலா எலும்பில் படைக்க பட்ட பெண்களை பற்றிய மேற்கண்ட ஹதிஸ் பேசுகிறது ஆதி பாவத்தை பற்றி பேசவில்லை*
👇👇👇👇👇👇
பெண்களின் இயல்பான குணங்களைக் குறிப்பிடவே வளைந்த எலும்பாகிய விலா எலும்புச் சுட்டிக் காண்பிக்கப் படுகின்றன மற்றோர் ஹதிஸ் அறிவிப்பு
👇👇👇👇👏🏻
*பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய் அதற்காக அப்படியே அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்*. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி – 5184)
*பெண் விலா எலும்பைப் போன்றவள் அவளை நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய் வளைந்த எலும்பில் படைக்க பட்ட பெண்கள் ஒரு சில நேரத்தில் கணவனுக்கு கீழ் படியாமல் போவது இது தான் காரணம் எனவே பெண்ணின் இயல்பானத் தன்மையோடு அவளுடன் வாழ்ந்தால் குடும்ப வாழ்க்கை சீராகவும், சுமுகமாகவும் அமையும் என்பதே இதன் பொருளாகும் இது ஆன்மிக அர்த்ததில் பெண் படைப்பு பற்றி சொல்ல பட்ட காரியம் ஆகும் இதில் ஆதி பாவம் என்பதே இல்லை*
விலா எலும்பில் படைக்க பட்ட ஆதி பெண் ஹவ்வா படைக்க படாமல் இருந்து இருந்தால் உலக பெண்களில் விலா எலும்பை பே ால் இருந்து தங்கள் கணவனே ஏமாற்றி இருக்கமாட்டார்கள்..
பெண்கள் கணவனே ஏமாற்றி இருக்கமாட்டார்கள் என்ற ஹதிஸ் ஹவ்வா படைக்க பட்ட விததை பற்றியே பேசுகிறது ஆதி பாவம் இதில் இல்லை..
அல்லாஹ் அலம்
Comments
Post a Comment