கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

♦1) இஸ்லாம் பெண்களின் ஆனுமதி பெற்று தான் திருமணம் முடிக்க எங்கே சொல்கிறது..?


♦2) நபி ஸல் அன்னை ஆயிஷா ரலி அவர்களை திருமணம் முடித்த சமயத்தில் அவர்களிடம் சம்மந்தம் பெற்றார்களா என்பதே.....?


#முதல்_கேள்விக்கான_பதில்..


எந்த பெண்ணே கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது திருமறை குர்ஆனில்....


19. நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. 

திருக்குர்ஆன்  4:19


மேற்கண்ட குர்ஆன் வசனம் அறியாமை காலத்தில் பெண்களை கட்டாய படுத்தி அல்லது விருப்பம் இல்லாத நிலையில் இருந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் அப்பெண்ணுக்கு திருமணம் முடித்து கொடுக்கும் வழக்கம் இருந்தது இதை கண்டித்து இறக்க பட்ட வசனமே மேலே உள்ள வசனம் ஆகும்


#ஆதாரம் புஹாரி 6948 


♥திருமண விசயத்தில் பெண்ணிடம் கண்டிப்பாகச் சம்மதம் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 


5136. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்  நபி(ஸல்) அவர்கள், “கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்““ என்று கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)““ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள். 79 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்


#மேலும் புகாரி 6968, 6970, 6971) 


♥பெண்ணின் சம்மதமின்றி செய்து வைக்கப்பட்ட திருமணத்தை ரத்துச் செய்யவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். 


6945. கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.  கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.9 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க


#மேலும் புகாரி 6969


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

#இரண்டாவது_கேள்விக்கான_பதில்


திருகுர்ஆனின் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் 23 வருடங்களாக சிறிது சிறிதாக அருளப்பட்டு முழுமை அடைந்தது ...


அன்னை ஆயிஷா ரலி திருமண காலம் என்பது இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டம் ஆகும் ஆயிஷா ரலி அவர்களை திருமணம் முடிக்கும் போது சம்மதம் கேட்டார் என்று எந்த செய்தியும் இல்லை கேட்கவில்லை என்றும் இல்லை அது அல்லாஹ்வே நன்கறிந்தவன் மேலும் ஒரு பெண்ணிடம் சம்மதம் கேட்டுத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற சட்டம் இந்த திருமணத்துக்கு பிறகே வந்தது அதன் பிறகு ஆயிஷா ரழி அவர்களிடம் நபி ஸல் சம்மதம் கேட்டார் ஆயிஷா ரழி அவர்களிடம் மாத்திரமல்ல தனது மற்ற மனைவிகள் அனைவரிடமும் சம்மதம் கேட்டார்கள்....


நபி ஸல் தங்கள் மனைவிகளிடம் திருமண வாழ்க்கையே தொடர சம்மந்தம் பெற இறைவன் புறத்தில் இருந்து கட்டளை வந்த செய்தி...


♥நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.


(அல்குர்ஆன் : 33:28)


♥“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!


(அல்குர்ஆன் : 33:29)


இறை புறத்தில் சட்டம் வந்த பின் நபி ஸல் முதல் முதலாக தன்னுடன் வாழ சம்மந்தமா என்று முதல் முறையாக கேட்டது அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் தான்... 


நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்


இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிட்டப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) ‘நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்படவேண்டாம்’ என்று கூறினார்கள். என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்க உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்’ எனும் (திருக்குர்ஆன் 33:28,வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? #நான் #அல்லாஹ்வையும்_அவனுடைய #தூதரையும்_மறுமை_வீட்டையுமே #விரும்புகிறேன்_என்று_சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.


இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.


ஸஹீஹ் புகாரி : 4786.


அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை


எனவே ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களுடன் விரும்பி சம்மதத்துடன் தான் வாழ்ந்தார்கள் ...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


பெண்களின் திருமண சட்ட விசயங்களில் இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த குறையும் இல்லை ஆனால் கிறிஸ்தவர்கள் பின் பற்றும் பைய்பிளில் நாம் தேடி போனால் எந்த தெளிவும் கிறிஸ்தவர்களால் கொடுக்க இயலாது....


உதாரணமாக நம்மிடம் கேள்வி கேட்ட 

Puthuveetil Akbar Mubeer Babu என்ற இவரிடம் சிறிய ஒரு கேள்வியை வைக்கிறேன் ...


திருமண விசயத்தில் கிறிஸ்தவ பெண்களிடம் சம்மந்தம் பெற்று தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று பைய்பிள் கூறும் சட்டத்தை ஆதாரமாக இவர்களால் காட்ட இயலுமா..? 


மிக முக்கிய குறிப்பு சம்பவத்தை காட்ட கூடாது சட்டத்தை காட்டனும்....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துகள் நீக்கபடும்....

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

பெண் கல்வி குறித்து இஸ்லாம்