ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?
*ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?*
👇👇👇👇👇👇👇
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. *ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.*
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3330.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
பெண்களின் விஷயத்தில் நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று அல்லாஹ்வின் தூர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி 3331)
மேற்கண்ட ஹதிஸை காட்டி ஹவ்வா அலை அவர்களால் தான் மற்ற பெண்கள் கணவனுக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் இது ஆதி பாவம் தானே..?
ஹாவ்வா படைக்க படவில்லை என்றால் பெண்கள் தவறு செய்து இருக்கமாட்டாங்களே என்று கேள்வி எழுப்புகிறார்கள்..?
*இதற்க்கு பதிலை அறிய வேண்டும் என்றால் முதலில் பெண்களின் படைப்பு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை பார்க்க வேண்டும்*
👇👇👇👇👇👇👇
*முதல் மனிதர் ஆதம் அலை அவர்களின் இடதுபக்க விலா எலும்பை எடுத்து அவர் மனைவியைப் படைத்ததாக மேற்கண்ட நபிமொழியில் உள்ளது உலகில் உள்ள எல்லா பெண்களும் வளைந்த எலும்பாகிய விலா எலும்பில் இருந்தே படைக்க பட்டு உள்ளார்கள்*
*வளைந்த எலும்பாகிய விலா எலும்பில் படைக்க பட்ட பெண்களை பற்றிய மேற்கண்ட ஹதிஸ் பேசுகிறது இதி பாவத்தை பற்றி பேசவில்லை*
👇👇👇👇👇👇
பெண்களின் இயல்பான குணங்களைக் குறிப்பிடவே வளைந்த எலும்பாகிய விலா எலும்புச் சுட்டிக் காண்பிக்கப் படுகின்றன மற்றோர் ஹதிஸ் அறிவிப்பு
👇👇👇👇👏🏻
*பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய் அதற்காக அப்படியே அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்*. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் – அபூ ஹுரைரா(ரலி) நூல் – புகாரி – 5184)
*பெண் விலா எலும்பைப் போன்றவள் அவளை நேராக்க முயன்றால் உடைத்துவிடுவாய் வளைந்த எலும்பில் படைக்க பட்ட பெண்கள் ஒரு சில நேரத்தில் கணவனுக்கு கீழ் படியாமல் போவது இது தான் காரணம் எனவே பெண்ணின் இயல்பானத் தன்மையோடு அவளுடன் வாழ்ந்தால் குடும்ப வாழ்க்கை சீராகவும், சுமுகமாகவும் அமையும் என்பதே இதன் பொருளாகும் இது ஆண்மிக ஆர்த்ததில் பெண் படைப்பு பற்றி சொல்ல பட்ட காரியம் ஆகும் இதில் ஆதி பாவம் என்பதே இல்லை*
Comments
Post a Comment