அவன் என்பது மதிப்புக்குறிய வார்த்தையே..
*அவன் என்பது மதிப்புக்குறிய வார்த்தையே..*
அவன் என்று இஸ்லாமியர்கள் இறைவனே அழைப்பதால் அது மரியாதை இல்லாமல் அழைப்பது என்று ஒரு சிலர் கருதினால் அது அவர்களின் அறியாமை தான்..
*இறைவன் கண்ணியம் மிக்கவர் அவர் என்றும் புகழ படுவதுக்கு உரியவர் தான் அவன் என்று கூறுவது ஒரு இலக்கிய நடை உலகில் உள்ள பல மொழிகளில் இந்த நடை உண்டு....*
தமிழில் கூட மேலே அவன் ஒருவன் இருக்கிறான் என்று கோபத்தில் சொல்லுவோம் இப்படி பேசுபவர் மேலே உள்ள கடவுளின் மீது நம்பிக்கையில் பேசுகிறார் என்ற அடிப்படை இருக்கிறது மரியாதை இல்லாமல் அவர் பேசவில்லை...
இன்னும் சொல்ல போனால் மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன் என்றே குறிப்பிடும் வழக்கம் இன்றும் கூட உண்டு
வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறுகிறான், ராமன் வில்லை உடைத்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்
இது எல்லாம் தமிழ் நடை...
அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் #ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
*அவர்கள்* என்று பலரை குறிப்பதற்கு அரபியில் *ஹூம்* என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்
ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக *ஹூம்* அவர்கள் என்று கூறவே மாட்டார்கள்.
அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது *ஹூவ* (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது *ஹூம் அவர்கள் என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை*
*ஹூவ* அவன் என்ற வார்த்தை தமிழை போல் ஒரு மரியாதை அற்ற வார்த்தை அல்ல இடம் பொருள் எற்றவாறு அர்த்தம் விளங்க வேண்டும்...
*கம்பனின் மொழி நடை என்ற கட்டுறையில்*
*இவனை* இன்துணை உடைய போர் *இராவணன்*, என்னே
புவனம் மூன்றையும் வென்றது ஒர்பொருள் எனப் புகழல்
*சிவனை* நான் முகத்து *ஒருவனை*, திருநெடுமால் ஆம்
*அவனை* அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறியேன்!
*இங்கு சிவன் கடவுளை அவன் என்று அழைக்கிறார்* கம்பர் இது மரியாதை இல்லாமல் எழுதவில்லை இது இலக்கிய கவி நடை...
*குர்ஆன் என்பது உயர்ந்த இலக்கிய கவி நடையில் இருக்கிறது...*
இறைவனின் கண்ணியத்துக்கு மரியாதைக்கு குறை இருக்க கூடாது என்பதால் தான் அவனின் உருவம் இஸ்லாத்தில் இல்லை
அவனுக்கு மகன் மனைவி இல்லை என்கிறோம்
உறக்கம் பசி இல்லை என்கிறோம் அவனே தவிர வணக்கத்துக்கு தகுதியானவர் யாரும் இல்லை என்று இறைவனே பார்க்கிறாம் இறைவனை மரியாதை இல்லாமல் குர்ஆன் உச்சரிக்கவில்லை அது ஒரு உயர்ந்த இலக்கிய நடை...
தமிழிலும் இந்த இலக்கிய நடை உண்டு..
இன்று நாம் உபயோக படுத்துவது இல்லை..
தமிழ் இலக்கியம் அறிந்தவர்களுக்கு இந்த நடை தவறாக தெரியாது....
*இது போன்ற கேள்விகளை கேட்க்கும் அவர்களிடம் ஒரே கேள்வி கேட்கிறேன்*
*நீங்கள் வணங்கும் இறைவனே அவன் என்று நீங்கள் அழைத்தால் உங்க தேவனின் மதிப்பு உங்களால் குறைந்து போகுமோ..?*
நாங்கள் வணங்கும் இறைவன் உலகமே அவறை துஷித்தாலும் அவரின் புகழ் ஒன்றும் குறையாது என்பது தான் எங்களின் நம்பிக்கை....
மனிதர்கள் மதிப்பு கொடுத்தால் தான் கடவுளின் மகிமை அதிக படும் என்பதை நாங்கள் நம்பவில்லை...
எங்கள் மார்க்கம் கற்றுக்கொடுக்கவும் இல்லை...
*இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப் போவதில்லை*
*முஸ்லிம் 5033*
Comments
Post a Comment