பெண் கல்வி குறித்து இஸ்லாம்

அவனே எழுது கோலைக் கொண்டு எழுத்தறிவித்தான். மனிதனுக்கு தெரியாததை எல்லாம் கற்றுக் கொடுத்தான்”  


அல்குர்ஆன் 96: 1-5


கல்வி கற்பதில் ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார் எனவே தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். புகாரி-101


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியாளரான அபூபக்கரின் மகள் ஆவார் உயர்திரு நபித்தோழர்களும் இஸ்லாமிய ஆட்சி கடிவாளத்தை கையில் ஏந்திய கலீபாக்களும் கூட அன்னை ஆயிஷா அவரை அணுகி வழிகாட்டுதலை பெற்றுள்ளார்கள்..


அன்னை ஆயிஷாவின் முதன்மை சீடராக விளங்கியவர் உர்வா ரலியல்லாஹு அன்ஹு ஆவார் அவர் கூறுயதாவது திருக்குர்ஆன் விரிவுரை வாரிசுரிமை சட்டங்கள் ஹலால்-ஹராம் அரபு இலக்கியம், அரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா அவர்களை விட புலமை பெற்றவராக யாரையும் நான் கண்டதில்லை என்று கூறி உள்ளார்கள்...=


இன்று பல ஆயிரம் ஹதிஸ்களை அறிவித்தவர்களில் ஆயிஷா ரலி முதன்மையானவர் ஆவார்....

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...