தேவைகள் அற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக.?

தேவைகள் அற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக.?

கிறிஸ்தவர்கள் இரவு பகல் பார்க்காமல் பூமியிலும் வணங்குகிறீர்கள் இனி பரலோகத்திலும் நித்திய காலமும் வணங்க போகிறீர்கள் இப்படி பட்ட வணக்க வழிபாட்டால் உங்க கிறிஸ்துவுக்கு என்ன நன்மை கிடைக்க போகிறது..?


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இஸ்லாத்தை பொருத்த வரை எங்கள் இறைவன் தேவைகள் அற்றவன் தான் தன்னை வணங்க இறைவன் கட்டளையிட்டு உள்ளான் அப்போ உங்க கடவுளும் வணங்க தானே கூறியுள்ளான்  அப்போ உங்க இறைவனுக்கும் வணங்க வழிபாடு தேவையாக இருக்கிறது தானே என்று கேட்க்கின்றனர்.. 


எங்கள் இறைவன் தேவைகள் அற்றவன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அல்ல.....


அவன் தன்னை வணங்க சொல்லுவதால் அவன் தேவையுள்ளவன் என்று கூற முடியாது காரணம்....


முஸ்லிம்கள் செய்யும் வணக்க வழிபாடு எங்களின் தேவைக்காக தான் வழிபாடு செய்கிறோம் இந்த பூமியில் மெய் இறைவனை அறிந்து வணங்குகிறோம் என்றால் அதன் பலனை பரலோகத்தில் பெறுவதற்க்காக தான் வணங்குகிறோம்


எங்கள் இறைவனை முஸ்லிம்கள் மட்டும் அல்ல உலக மனித இனமே ஒன்று சேர்ந்து அவனை வணங்காவிட்டாலும் துஷித்தாலும் அவனின் புகழ் குறைந்து போக போவதும் இல்லை 


உலக ஐனம் ஒன்று சேர்ந்து வணங்கினாலும் அவனின் புகழ் உயர போவதும் இல்லை


அவனுக்கு புகழ்சி வணக்கங்கள் தேவையில்லை....


எங்களின் தேவைக்காக நாங்கள் வணங்குகிறோம் எங்கள் வணக்கத்தை சரி பார்த்து அதன் கூலியை திருப்பி கொடுப்பராக எங்கள் இறைவன் இருக்கிறார்..


“நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது; நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.

(அல்குர்ஆன் : 14:8)


5033. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: என் அடியார்களே! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார்,  மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)! என் அடியார்களே! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும். ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்