விருத்தசேதனம் தடை செய்யபட்டதா.?

விருத்தசேதனம் தடை செய்யபட்டதா.?


சுன்னத் காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி பவுல் கூறியது ஏன்.?


முழுமையான ஆய்வு...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இயேசுவின் நேரடி சீடர்கள் விருத்தசேதனத்தை தடை செய்தார்களா..?


விருத்தசேதனம் ஒன்றும் அவர்கள் தடை செய்யவில்லை .....


அன்றேய கால #அந்தியோக்கியா புறஜாதி கிருஸ்தவர்கள் இவர்களுக்கு  


பழைய எற்பாடு என்றால் என்ன.?


தேவன் யார் .?


அவரின் பண்புகள் என்ன.?


அவருடைய சட்டங்கள் என்ன.?


இதை பற்றி அ ஆ இ ஈ கூட தெரியாத மக்கள் முதல் முறையாக அந்தியோக்கியா நாட்டில் பவுல பர்னபா முலம் இயேசுவே எற்றுக் கொண்டனர் 


இவர்களிடம் நியாயபிராமானம் விருத்தசேதனம் கைக் கொள்ளும் அன்றேய கால யூத கிருஸ்தவர்கள் ஒரு சிலர் சென்று அந்தியோக்கிய நாட்டிற்க்கு சென்று புற ஜாதி மக்கள் நியாயபிராமானம் விருத்தசேதனம் கைக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள் 


1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து; நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். 

அப்போஸ்தலர் 15:1


இந்த சட்டங்களை கேட்ட அந்த காலத்து புறஜாதி அந்தியோக்கியா மக்கள் பயந்து கலங்கினர் தீடிர் என்று ஒரு சிலர் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஒரு சில நடுக்கம் பயம் மனிதனக்குல் எற்பட தான் செய்யும் 


அந்த நடுக்கம் பயம் அந்தியோக்கியா நாட்டு மக்களுக்கு ஏற்பட்டது...


24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயாப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, 

அப்போஸ்தலர் 15:24


அந்தியோக்கியா மக்கள் இயேசுவே எற்றுக் கொண்ட தொடக்க கால கட்டம் இப்படி பட்ட கால கட்டத்தில் புற ஜாதி கிருஸ்தவர்களை கலங்கடித்து பயம் முறுத்த வேண்டாம் என்று 


19 ஆதலால் #புறஜாதிகளில்_தேவனிடத்தில்_திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 

அப்போஸ்தலர் 15:19


#தொடக்க காலத்தில் விருத்தசேதனத்தை தடை செய்தார்கள்...


ஆனால் இயேசுவின் சீடர்களின் கையில் நேரடியாக சுவிசேஷம் பெற்ற   யூத கிருஸ்தவர்கள் விருத்தசேதனம் மோஷையின் நியாயபிராமணத்தை பின் பற்றியே வந்தனர்..


#அதாராம்..👇👇👇


அப்போஸ்தல நடபடி 21:20,21


பிற்காலத்தில் புற ஜாதி சபை வளர்ந்தது பல தேசங்களில் புற ஜாதி மக்கள் கிருஸ்தவர்களாக வாழ்ந்தனர் அவர்கள் வாழும் தேசத்தில் இயேசுவின் நேரடி சீடர்களிடம் சுவிசேஷம் கற்ற யூத கிருஸ்தவர்கள் சென்று நியாயபிராமணத்தையும் விருத்தசேதனத்தையும் செய்ய சொல்லி புற ஜாதி மக்களுக்கு கட்டளைகளை கொடுத்தனர் 


யூத கிருஸ்தவர்களின் சுவிசேஷத்தை புற ஜாதி கிருஸ்தவர்கள் எற்றுக் கொண்டனர்...


புற ஜாதி கிருஸ்தவர்கள் பவுலின் சுவிசேஷத்தை மறுதலித்து பவுலின் உபதேசம் எடுபடாது என்று அறிந்து  நியாயபிராமணத்தை கைக் கொண்டும் விருத்தசேதனத்தை கைக் கொள்ள தொடங்கியதால் பவுல் வேதனை பட்டு பெண்களை போல் கற்ப வேதனை அடைகிறார்...


12 மாம்சத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.


கலாத்தியர் 6


6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். 

கலாத்தியர் 1:6


10 அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள்,அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதைமயக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்.


தீத்து 1


புறஜாதி கிருஸ்தவர்கள் பவுலின் கொள்கையை கைவிட்டு பவுலை எதிரியாகவும் நினைத்த காரியங்களை பவுலின் கடிதங்களில் நாம் காணலாம்....


புறஜாதி கிருஸ்தவர்கள் பவுலின் சவிசேஷத்தை விட்டு விலகிய காரணத்தால் தான் பவுல் பல புற ஜாதி கிருஸ்தவ நாடுகளுக்கு கடிதம் எழுதி புலம்பி அழுகிறான்..


அந்த கடிதங்கள் தான்...


கலாத்தியர் கடிதம்


1கொரிந்தியர் கடிதம்

2கொரிந்தியர் கடிதம்


ரோமர்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்னும் ஒரு சில கடிதங்களும் உண்டு....


குறிப்பாக இந்த கடிதங்களை நாம் ஆய்வு செய்தாலே நமக்கு புரிய வருவது பவுல் தனக்கு என்று ஒரு கூட்டத்தை ஆதாய படுத்தி கொள்வதற்க்காக பல கஷ்டங்கள் பட்டதாகவும் புறஜாதி கிருஸ்தவர்கள் நியாயபிராமானம் விருத்தசேதனம் செய்ய வேண்டாம் என்ற இலகுவான சட்டங்களை கொடுத்து பொய் சொல்லி ஒரு கூட்டத்தை தன் வசம் வைத்து உள்ளான் என்பது நமக்கு விளங்கும்...


21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.


1 கொரிந்தியர் 9


19 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஐனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.


1 கொரிந்தியர் 9

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்