நபி_ஸல்_முதல்_முஸ்லிமா
#நபி_ஸல்_முதல்_முஸ்லிமா..?
வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
162, 163. "எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; #முஸ்லிம்களில்_நான்_முதலாமவன்'' #என்றும்_கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:163
மேற்கண்ட வசனத்தை காட்டி நபி ஸல் அவர்கள் தான் முதல் முஸ்லிம் என்று சொல்ல பட்டு இருக்கு அதனால் அவருக்கு முன்பு முஸ்லிம்கள் இல்லை என்று சிறு பிள்ளை தனமாக கிறிஸ்தவர்கள் நம்மிடம் கேள்வி கேட்க்கிறார்கள் அவர்களுக்கான பதிலை இந்த பதிவில் காண்போம்......
நபி ஸல் முன்பாக முஸ்லிம்கள் இல்லையா என்று பார்த்தால் இருந்து இருக்கிறார்கள் பல இறை தூதர்களையும் அவர்களை பின் பற்றின மனிதர்களையும் குர்ஆன் பல இடங்களில் முஸ்லிம்ங்கள் என்று திருக்குர் கூறுகின்றன....
திருக்குர்ஆன் 2:132, 3:64, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 22:78, 43:69, 46:15)
♥♥♥♥♥♥♪♪♪♪♪♪♪♥♥♥♥♥♥
ஆதாம் என்ற முதல் மனிதன் கூட அல்லாஹ்வின் இறை தூதர் நபி தான்...
அல்லாஹ்வின் தூதரே ஆதம் ஒர் இறை தூதரா ? என்று கேட்டேன் அதற்க்கு நபியவர்கள் ஆம் ஆதம் ஒரு இறை தூதர்தாம் அவரை தனது கையால் அல்லாஹ் படைத்தான் அவருக்குள் தனது உயிரை ஊதினான் பின்னர் அவரை நேரடியாகச் சீரமைத்தான் என்று கூறினார்கள் இமாம் இப்னு ஹிப்பான் ஸஹீஹ் 2085
33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.
திருக்குர்ஆன் 3:33
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நபி ஸல் முன்பு முஸ்லிம்கள் இருக்க நபி எப்படி முதல் முஸ்லிமாக இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு வரும் குர்ஆனை முழுமையாக அறியாதவர்கள் இப்படி பட்ட கேள்விகளை நம்மிடம் கேட்ப்பது புதிய காரியம் அல்ல....
#அதாவது
உலகில் பல தூதர்கள் முஸ்லிமாக வாழ்ந்து மரணித்தாலும் அவர்களில் வணக்க வழிபாடு யார் அதிகமாக செய்து இறைவனுக்கு முற்றிலும் கீழ் படிந்து முதலிடம் வகிந்தவர் இறை தூதர் ஸல் அவர்கள் தான்.....
#கீழ்_கண்ட_குர்ஆன்_வசனத்தை #படியுங்கள்👇👇👇👇👇👇👇
11, 12. #வணக்கத்தை #உளத்தூய்மையுடன்_அல்லாஹ்வுக்கு #மட்டுமே_உரித்தாக்கி_அவனை_நான் #வணங்க_வேண்டுமெனக் #கட்டளையிடப்பட்டுள்ளேன்; #முஸ்லிம்களில்_முதலாமவனாக_நான் #ஆக_வேண்டுமெனவும் #கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 39:12
மேற்கண்ட குர்ஆன் வசனத்தை நாம் படித்தாலே விளங்ககும் நபி ஸல் அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டு உள்ளான் வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுக்கு மட்டும் உரித்தாக்கி இறைவனை அதிகமாக வணங்க வேண்டுமேன இறைவன் நபிஸல் அவர்களுக்கு கட்டளையிட்டு உள்ளார் என்பது நமக்கு தெரிய வரும்
#நபி_ஸல்_இறைவனை்_அதிகமாக #வணங்கியவர்
👉நீண்ட நேரம் தொழுவார்கள்.
(புகாரி 1135/ 1147 முஸ்லிம் 1421)
👉நீண்ட நேரம் ஓதுவார்கள்
(புகாரி 5046 : திர்மிதி 3177,73) 👉
இரவுத்தொழுகைகளை விடமாட்டார்கள் (முஸ்லிம் 1357/ அஸ்ஸஹீஹா 68-)
👉நோன்புகளை விடமாட்டார்கள் (முஸ்லிம் 608)
👉முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவா் என்றாலும் இரவில் விழித்திருந்து #கால்வீங்க #வணங்குவார்கள்.
(புகாரி 4836/திர்மித 414)
இப்படி கடுமையான இறை அச்சம் கொண்டு இறைவனை அதிகமாக அவர் வணங்கிய காரணத்தால் தான் இறைவனே நபி ஸல் அவர்களை முஸ்லிம்களில் முதன்மையானவர் என்று சிறப்பு அந்தஸ்த்தை கொடுக்கிறார்...
#முஸ்லிம்களில்_நான்_முதலாமவன்'' #என்றும்_கூறுவீராக!
திருக்குர்ஆன் 6:163
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
85. இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.
திருக்குர்ஆன் 3:85
இஸ்லாம் ஒன்றே தீர்வு மறுமை நாளில் மற்ற மார்க்காதார்களுக்கு எந்த பலனும் மறுமையில் இல்லை ......
Comments
Post a Comment