கானானியர் தண்டிக்க பட்டது நியாமா?

 பைய்பிளின் தேவன் யாக்கோபின் வழி மரபுகள் (இஸ்ரவேலர்களை மட்டும் எகிப்தில் இருந்து கானான் தேசத்திற்க்கு ஏன் அழைத்து சென்றார் இந்த யாக்கோபின் சந்ததிகளுக்காக கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியர்களை ஏன் கொன்று குவித்தார் ..?


என்று இஸ்லாமியர்களின் தரப்பில் கேள்வி கேட்க்க பட்டன .....


இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு சில சகோதரர்கள் பதில் அளித்து இருந்தார்கள் 


https://m.facebook.com/groups/795306610666314?view=permalink&id=1231680477028923


கிறிஸ்தவரின் பதில் லீங்கில் உள்ளது நமக்கு எற்புடையதாக இல்லை இதற்க்கு மறுப்பும் பல எதிர் கேள்விகளுடன் இறைவன் எனக்கு கொடுத்த ஞானத்தை கொண்டு எழுதுகிறேன்.....


கிறிஸ்தவர்கள் முதலில் கூறியது #எங்கள்_தேவன்_நீதியுள்ளவர் என்றார்..


#பாவம்_பார்க்காத_சுத்த_கண்ணர் என்று கூறிய அவர் அடுத்த வரியில்

.

#பாவம்_செய்கிற_ஆத்துமா_சாகும் என்று அவரின் கருத்து முறனாக அவரே எழுதி இருக்கிறார்....


உன்னையில் நீதியுள்ளவாரா ..?


பாவம் செய்கின்ற மக்களை யாராக இருந்தாலும் பார பட்சம் பார்க்காமல் கொல்லுபவரா..?


என்பதையும் பார்க்க போகிறோம்....


கானான் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களை ஏன் கொண்று குவித்தார் என்று கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் மிக சுறுக்கமான பதில் தான்..


அவர் தந்த பதில் கானானியர்கள் சகல  அருவருப்பான பாவங்கள் செய்து வந்தனர் என்பதே அவரின் பதிலாக இருந்தன...


கானானியர்கள் செய்த அருவருப்பான காரியங்களையும் வரிசையாக தொகுத்து இருந்தார்....


கானானியர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படி இஸ்ரவேலர்களும் செய்யும் படி  உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி கானான் தேசத்தில் வாழும் கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியர்களை ஏன் கொன்று குவிக்க கட்டளையிட்டார் என்பது தான் அவரின் பதில்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அவர் சொன்ன இரு பதில்


1)கானானியர்கள் அருவருப்பான பாவம் செய்கிறவர்கள்...


2)இந்த கானானியர்களுக்கு மத்தியில் யாக்கோபின் சந்ததிகள் வாழ்ந்தால் அவர்களும் வழி தவறி போயிவிடுவார்கள்....


இதற்க்காக தான் கர்த்தர் கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியர்களை கொன்று குவித்தார் என்பது தான் இவரின் பதில் .....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


சகோ Stephen Joyson பதிலுக்கான மறுப்பு ..


#முதலில்_இந்த_கானானியர்கள்_யார்..?


#என்பதை_நாம்_பார்க்கனும்...


நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, #கானான் #சபிக்கப்பட்டவன்_தன்_சகோதரரிடத்தில் #அடிமைகளுக்கு_அடிமையாயிருப்பான் #என்றான் சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. #கானான்_அவனுக்கு #அடிமையாயிருப்பான். 


ஆதியாகமம் 9:24,25,26


மேற்கண்ட வசனத்தில் #நோவாவின்_மகன் #தான்_கானான் என்பதும் இவரின் சந்ததிகள் தான் பிற்காலத்தில் கானானியர்களாக கானான் தேசத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பது கூறிப்பிட தக்கது..


#மேலும்


#கர்த்தரின்_தீர்க்கதரிசி_நோவா_கொடுத்த #சாபம் 👇👇👇👇👇


நோவாவின் தீர்க்கதரிசி திராட்சை ரசம் என்னும் பட்ட சாராயம் குடித்து ஆடை விலகி கிடந்தாகவும் அதை #கானான் என்ற நோவாவின் இளைய மகன் தன் சகோதரர்களுக்கு தகப்பன் நோவா பட்ட சாராயம் குடித்து ஆடை விலகி கிடக்கிறார் என்று கூறி சக சகோதரர்களுக்கு வெளிப்படுத்திய காரணத்தால் நோவா கானானே சபிக்கிறார் அவன் தன் சகோதரர்களுக்கு மத்தியில் அடிமையாக இருப்பான் என்று சபிக்கிறார்...


#நோவா_தீர்க்கதரிசனமாக_கொடுத்த #சாபத்தை_பெற்ற_கானானியர்கள் 


காலம் காலமாக பைய்பிளின் கர்த்தரின் பார்வையில் இருந்து வழிவிலகினர்...


கானானியர்களின் சமுகத்திற்க்கு தீர்க்கதரிசி என்று யாரும் இல்லை


கானானியர்களுக்கு பாவத்தை வெளிப்படுத்தும் வேதமும் இல்லை...


கானானியர்களுக்கு மெய்யான தேவன் யார் என்பது கூட தெரியாமல் கானான் தேசத்துக்கு உள்ளாக வாழ்ந்து வந்து உள்ளனர்...


இதுவே கானனியர்களின் வரலாறு


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#யாக்கோபின்_சந்ததிகளின்_வரலாற்றையும் நாம் இந்த பதிவில் நிச்சயம் பார்க்க வேண்டியதாக உள்ளது....


முதலில் யாக்கோபு யோக்கியனா..? என்பது பார்ப்போம்..


கிறிஸ்தவர்கள் லேவி 18ம் ஆதிகாரத்தில் உள்ள அருவருப்புகளை காட்டி கானானியர்கள் இப்படி பட்ட அருவருப்புகளை செய்து வந்தனர் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள் 


இந்த லேவி 18ல் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது

👇👇👇👇👇

18 உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது. 

லேவியராகமம் 18:18


இந்த சட்டத்தை கைக்கொள்ளதவர் தான் இந்த யாக்கோபு ஒரே நேரத்தில் லேயாள் ராகேல் அக்கா தங்கச்சி இருவரையும் நிர்வாணமாக்கும் பொருட்டு யாக்கோபு திருமணம் செய்து இருந்தார் என்பது கூறிப்பிட தக்கது.....


#யாக்கோபின்_மகன்_யூதா செய்த காரியம் எல்லாருக்கும் தெரியும் 


காம வெறி பிடித்து விபச்சாரி என்று நினைத்து #யூதா_மருமகளை #கற்பளித்தவன்


#மேலும் 


#லேவி 18:16 #சொல்ல_பட்ட_அருவருப்பு அமல் படுத்திய யூதா தன் மகன் ஏர் என்பரின் மனைவியை சகோதரன் ஒனான் நிர்வாணம் ஆக்கி சயணிக்க கட்டாய படுத்த பட்டு உள்ளான் கர்த்தர் இந்த அருவருப்பு துனையாக இருந்தும் உள்ளார் ....


லேவி 18:8 ஐ #மீறிய #யாக்கோபின்_மகன் #ரூபன்....


தகப்பனின் மனைவிகளிடம் உடல் உறவு வைத்து இருந்த ரூபன் இவர் யாக்கோபின் மகன் ஆவார்.....


ஆதியாகமம் 35:22


லேவி 18:12 ஜ #மீறிய_மோசையின்_தகப்பன்


மோசேயின் தகப்பன் அம்ராம் தன் தகப்பனின் சகோதரியை நிர்வாணமாக்கி தான் மோசேயை பெற்றார். 


யாத்திராகமம் 6:20


கானானியர்கள் செய்த அருவருப்பு யாக்கோபும் அவரின் சந்ததிகளும் செய்து உள்ளனர் என்பது நாம் கவணிக்க வேண்டும்....


#மேலும் 


எகிப்தில் இருந்த யாக்கோபின் சந்ததிகள் குறித்து மோசை கூறியதை பாருங்கள்.....

👇👇👇👇👇👇👇👇👇👇


6 ஆகையால், #உன்நீதியினிமித்தம்_உன் #தேவனாகிய_கர்த்தர்_உனக்கு_அந்த_நல்ல #தேசத்தைச்_சுதந்தரிக்கக்_கொடார் #என்பதை_அறியக்கடவாய்_நீ_வணங்காக் #கழுத்துள்ள_ஜனம். 

உபாகமம் 9:6


மேற்கண்ட வசனத்தில் நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும் யாக்கோபின் சந்ததிகளிடம் எந்த நீதியும் இல்லை என்றும் அவர்கள் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை என்றும் யாக்கோபின் சந்ததிகளும் தேவனே பின் பற்றாத பாவிகள் என்பது தெரிய வருகிறது..


#மேலும்_மோசை_கூறுவதை_கவணிக்கவும்


28 தேவரீர் #இந்த_ஜனங்களின் #முரட்டாட்டத்தையும், 


#இவர்கள்_ஆகாமியத்தையும், 


#இவர்கள்_பாவத்தையும் பாராமல், 


#உமது_தாசராகிய_ஆபிரகாம்_ஈசாக்கு #யாக்கோபு_என்பவர்களை_நினைத்தருளும். 

உபாகமம் 9:28


யாக்கோபின் சந்ததிகள் எப்படி பட்டவர்கள் என்பற்க்கு மேற்கண்ட வசனம் நல்ல உதாரணம்...


கானானியர்கள் பாவிகள் அவர்கள் வாழ்க்கை மோசமானதாக இருந்தது ஆதனால் அவர்களை கொண்று குவித்தார் என்று சொல்லுவது எற்புடைய காரியம் இல்லை...


யாக்கோபின் சந்ததிகளும் ஒழுக்கம் கேட்டவர்களாக தான் இருந்து உள்ளார்கள் கானானுக்கு போகிற வழியில் கன்று குட்டியை சிலையாக வடிவமைத்து வணங்கிய கூட்டத்தார்கள் யேகோவா தேவனே அறியாத ஜனமாக தான் யாக்கோபின் ஜனம் இருந்து உள்ளது ....


அருவருப்பான காரியங்கள் செய்து பாவிகளாக வாழ்ந்த யாக்கோபின் தலைமுறைக்கு ஒரு பார்வை கானானியர்களுக்கு ஒரு பார்வை வைத்து இருக்கும் தேவன் தான் நீதியுள்ள தேவனா..?


பாவம் செய்கிற ஜனம் சாகும் என்றால் யாக்கோபின் சந்ததிகளை ஏன் கொலை செய்யவில்லை..?


பாவிகளான யாக்கோபின் சந்ததிகளை ஏன்  கொலை செய்யவில்லை என்றால் அவர்களின் முற்பிதா ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு கானான் தேசத்தை உங்கள் தலைமுறைக்கு கொடுப்பேன் என்ற தேவன் வாக்குக்கொடுத்தது தான் காராணம்....


யாத்திராகமம் 6 :8


இந்த ஆணையின் காரணத்தால் தான் பல அருவருப்புகள் செய்து வந்த வணங்கா கழுத்து உள்ளவர்களை பைய்பிளின் தேவன் யாக்கோபின் சந்தததிகளை மட்டும் பாலும் தேனும் ஒடுகிற தேத்தில் வாழ வைத்தார்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


பாவம் என்றால் என்ன என்பது கானானியர்களுக்கும் யாக்கோபின் தலைமுறைக்கும் தெரியாது ஆதனால் பாவம் என்றால் என்ன என்பது நியாயபிராமாணம் முலம் இஸ்ரவேலர்களுக்கு கற்பித்தார்....


பாவம் கானானியர்களுக்கு பாவம் என்றால்  என்ன.?


தேவன் யார் .?


வேதம் என்றால் என்ன.? ஒன்றுமே தெரியாமல் அவர்கள் கொல்லபட்டனர்...


தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு இல்லை


ஒரு பாவமும் அறியாமல் எச்சரிக்கை செய்யாமல் கானானியர்கள் கொலை செய்யபட்டனர்.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


தன் ஜனம் யாக்கோபின் சந்ததிகள் பாவத்தில் விழுந்துவிட கூடாது என்பதற்க்காக ...


கானானியர்களிடம் இருந்து இஸ்ரவேலரகளை ஒதுக்கினார்...


கானானியர்கள் தங்கள் தேவனை வணங்ககூடாது....


கானானியர்களின் வழிப்பாட்டு தளங்களை இடித்து போட சொன்னார்...


யாத் 34:13

உபா 7:5

உபா 12:3


சூனியக்காரான் ஜோதிடக்காரார்களை கொலை செய்தார்...


யாத் 22:18


மாற்று மதத்தவன் இஸ்ரவேலர்களிடம் அந்நிய தேவனை அறிமுகம் செய்து ஊழியம் செய்தால் அவனையும் அவன் ஊர் மக்களையும் கொலை செய்ய சொன்னார்....


உபாகமம் 13 :12,13,14,15,16


கானானியர்களின் ஆண் குழந்தைகளையும் ஆண்களையும் திருமணம் ஆன பெண்களையும் கொலை செய்ய சொன்னார்...


எண்ணாகமம் 31:17


இப்படி பட்ட கொலைகள் நீதியுள்ள தேவன் செய்வாரா..?


தன்னை ஒரு கூட்டம் பின் பற்றனும் 


தன்னை வணங்கனும் 


தன்னை விட்டு விலகி வேறு மதத்திற்க்கு சென்று விட கூடாது 


என்பதற்க்காக ஒரு மத கொள்கை உருவாக்க அப்பாவி மக்களை கொலை செய்ய வைத்தவர் தான் பைய்பிளின் தேவன்  ...


16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், 

உபாகமம் 20:16


17 அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். 

உபாகமம் 20:17


18 அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும். 

உபாகமம் 20:18


இயேசு முன்பு கானானியர்களுக்கு செய்த வினை இன்று கிறிஸ்தவர்களுக்கு திரும்பி இருக்கிறது கிறிஸ்தவர்கள் நம் தேசத்தில் மதம் மாற்றம் செய்ய போயி மாற்று மதத்தவர்கள் அவர்களை இன்று விரட்டுவதை நாம் பார்க்க முடிகிறது......


தன் வினை தன்னை சுடும் என்பது சரியாக தான் இருக்கிறது......


கானானியர்களுக்கு நடந்த வினை இன்று கிறிஸ்தவர்களுக்கு நடக்கிறது.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பதிவு சம்மந்தமான பத்து கேள்விகள்..


1)கானானியர் அருவருப்பான காரியங்கள் செய்தார்கள்  அதனால் தேவன் அவர்களை கொலை செய்தார் என்றால் அதை பாவங்களை யாக்கோபின் சந்ததிகளும் செய்து உள்ளனர் இப்படி இருக்க யாக்கோபின் சந்ததிகளை ஏன் கொலை செய்யவில்லை..?


2)நியாயபிராமாணம் கொடுக்க படாத காலம் ஆதனால் யாக்கோபு சந்ததிகள் செய்தது பாவம் பாவம் அல்ல என்று கூறவும் முடியாது அப்படியானால் கானானியர்களுக்கும் எந்த பிராமாணமும் இல்லை தேவனின் வழி நடத்தலும் அவர்களுக்கு கிடையாது இப்படி இருக்க ஒரு தலைபட்சமாக கானானியர்களை மட்டும் ஏன் கொலை செய்தார்..?


3)நீதியுள்ள தேவன் என்று நீங்கள் கூறியிருந்திர்கள்   நீதியுள்ள தேவன் கானானியர்கள் மனம் திரும்ப வாய்ப்பு ஏன் கொடுக்கவில்லை..?


4)யாக்கோபின் சந்திகளுக்கு மோசையே கொண்டு பாவத்தை குறித்து பாடம் எடுத்த தேவன் கானானியர்களுக்கு ஏன் பாடம் எடுக்க தீர்க்கதரிசிகள் அனுப்பவில்லை..?


5)பாவத்தை குறித்து எச்சரிக்கை செய்யாமலே  அவர்களை கொலை செய்வது தான் தேவ நீதியா.?


6)நோவா தீர்க்கதரிசனமாக முன் கூட்டிய கானானியர்களை சபித்தது ஏன்..? 


7)முன் கூட்டிய கானானியர்கள்  அடிமையானவர்கள் வழிக் கேட்டில் போக கூடியவர்கள் என்று உங்க கர்த்தர் தீர்மாணித்து விட்டாரா..?


8)ஆபிரகாமின் சந்ததிகளில் யாக்கோபின் சந்ததிகள் வழியாக இரட்சிப்பு வர வேண்டும் என ஏன் தீர்மாணித்தார்..?


9)யாக்கோபு டூ இயேசுவின் இடைப்பட்ட காலம் 1500 வருடங்கள் என்று வைத்து கொண்டாலும் மற்ற தேசங்களில் குறிப்பாக ஆப்பிரிக்கா இந்தியா தேசங்களில் வாழ்ந்த ஜனங்களுக்கு ஏன் தீர்க்கதரிசிகள் வேதங்கள் கொடுக்கவில்லை..? 


10)ஆப்பிரிக்கா இந்தியா தேசங்களில் தேவனை அறியாமல் வாழ்ந்த ஜனங்களின் இரட்சிப்பு கேள்வி கூறியாகிவிட்டதே இயேசு வரும் வரை அவர்களை ஏன் வழிக்கேட்டில் விட்டார்..?


இந்த பத்து கேள்விகளுக்கும் கிறிஸ்தவர்கள் பதில் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்..

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்