ஆதாம் நபி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ..
ஆதாம் அலை எங்கு படைக்க பட்டார்..?
ஆதாம் சொர்க்கத்தில் இருந்து இறங்கவில்லையா..❓
#மேலும்
ஆதாம் எதனால் பூமிக்கு தள்ளப்பட்டார்..❓
இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை காண்போம்...❓
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆதாம் அலை பூமியில் இருந்து மண் எடுக்க பட்டு தான் படைக்க பட்டார் என்று குர்ஆன் மிக தெளிவாக எடுத்துக் கூறுகிறது..👇👇👇👇👇
ஆதாமை மண்ணால் மனிதனைப் படைத்தார்
திருக்குர்ஆன் 38:74
♥♥♥♥♥♥♥♥♥♥♥
மண் பூமியின் பல பகுதியில் இருந்து எடுக்கபட்டது..❓
அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) திர்மிதீ 2879,
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பூமியில் மண் எடுக்க பட்டது சரி எங்கு ஆதாமை இறைவன் படைத்தார்..❓
5089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் களிமண்ணால் படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். . இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். -
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆதாம் சொர்க்கத்தில் அமர வைத்தான் இறைவன்...
35. "ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்!
திருக்குர்ஆன் 2:35
ஆதம் வழி தவறியவுடன் அல்லாஹ் ஆதாமை சொர்க்கத்தில் இருந்து கீழே பூமிக்கு இறக்கிவிடுகின்றான்..
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்;
திருக்குர் ஆன் 2:38
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆதாமை சொர்க்கத்தை வீட்டு வெளியேற்றியது ஏன்..❓
#ஆதாமை_படைப்பதற்க்கு_முன்னதாக
இறைவன் வானவர்களிடம் பூமியில் பிரதிநிதியை படைக்கப்போவதாக கூறிய அல்லாஹ் 👇👇👇👇👇👇
"பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறினார்.
திருக்குர்ஆன் 2:30
இறைவன் வானவர்களின் கூறிய படி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு ஆதாம் தள்ளப்பட்டார்..
ஒரு சிலர் ஆதாம் பாவத்தின் காரணமாக ஆதாம் சொர்க்கத்தில் இருந்து தள்ள பட்டார் என்று கூறுகின்றனர் இது தவறு ஆகும்....
இறைவனின் சித்தம் என்பது பூமியில் தான் ஆதாமுடைய தலைமுறைகள் வாழ வேண்டும் என்பதே ...
திருக்குர்ஆன் 2:30
ஆதாம் தவறு இழைக்கா விட்டாலும் இறைவன் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றி இருப்பார்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆதாம் வசித்தது உன்மையான சொர்க்கமே இல்லை ஆதாமுக்கு என்று தனித்துவமான சொர்க்கத்தை இறைவன் அவருக்கு கொடுத்தார்...
ஆதாம் மற்றும் அவரின் தலை முறைகளுக்கு என்று வேறு ஒரு சொர்க்கம் உண்டு அதை ஆதாமும் காணவில்லை 👇👇👇👇👇👇
5437. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ”என் நல்லடியார்களுக்காக #எந்தக் #கண்ணும்_பார்த்திராத_எந்தக்_காதும் #கேட்டிராத_எந்த_மனிதரின் #உள்ளத்திலும்_தோன்றியிராத #இன்பங்களை_சொர்க்கத்தில்_நான் #தயார்படுத்தி_வைத்துள்ளேன்” என்று கூறினான். இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் குர்ஆனிலுள்ள ”அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 51. மறுமை சுவர்க்கம் நரகம்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆதாம் பூமிக்கு இறங்கிய போது இறைவன் ஆதாமை கைவிடவில்லை அவரை மன்னித்து இறை செய்தி கொடுக்கபட்டது👇👇👇👇👇👇
37. (பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே #அவரை_இறைவன் #மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:37
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஆதாமின் மக்களுக்கு நேர்வழி பாதை காட்டபடும் நற்செய்தி👇👇👇👇👇👇
38. "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு #நேர்வழி_வரும்_போது_எனது #நேர்வழியைப்_பின்பற்றுவோருக்கு #எந்த_அச்சமும்_இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.
திருக்குர்ஆன் 2:38
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
39. "(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்றும் கூறினோம்.
திருக்குர்ஆன் 2:39
Comments
Post a Comment