மரணம்_என்பது_தண்டனையா?

 வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ....


#மரணம்_என்பது_தண்டனையா..?


மனித சமுகத்திற்க்கு மரணம் என்பது ஒரு விதி ஒவ்வொறு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்....


இந்த மரணம் மனித சமுகத்திற்க்கு இறைவன் கொடுத்த தண்டனை என்று கிறிஸ்தவம் கற்பிக்கிறது....


12 ஆதாம் என்ற ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.


ரோமர் 5


மேற்கண்ட வசனத்தின் படி ஆதாம் என்ற ஒரு மனிதன் பாவம் செய்த காரணத்தால் மனித சமுகத்திற்க்கு மரணத்தையும் பாவ சுபாவத்தையும் இறைவன் தண்டனையாக கொடுத்தாராம் என்று கிறிஸ்தவர்கள் கூறுவது உண்டு ...


இந்த கொள்கையே இஸ்லாத்தில் நிலைநிறுத்த கிறிஸ்தவர்கள் பல கோணத்தில் நம்மிடம் கேள்விகள் எழுப்புவது உண்டு ....


#உதாரணமாக_இரு_கேள்விகளை_நாம்

#பார்க்க_போகிறோம்...


#முதல்_கேள்வி


நூஹ் நபி காலத்தில் மக்கள் பாவம் செய்த போது அவர்கள் பாவத்தின் காரணத்தால் இறைவன் பாவம் செய்த அந்த சமுகத்தை ஒட்டு மொத்தமாக அழித்தார் ஒரு சில இறை விசுவாசிகளை இறைவன் கப்பலில் காப்பாற்றினார்....


இந்த சம்பவம் வைத்து பாவத்தின் காரணமாக நூஹ் சமுதாயத்தை மரணம் என்னும் தண்டனை கொடுத்துவிட்டார் பாவத்தின் சம்பலம் மரணம் இஸ்லாமும் கிறிஸ்தவத்தை தான் போதிக்கிறது என்று சிறு குழந்தை போல வாதம் வைக்கிறார்கள்....


கிறிஸ்தவர்களின் இந்த அறியாமையே வெளிப்படுத்தும் விதமாக இந்த பதிவை எழுதுகிறேன்....


#மரணம்_என்பது_தண்டனையா..?


#இஸ்லாம்_கூறுவது_என்ன..?


நூஹ் நபி காலத்தில் ஒட்டு மொத்த சமுதாயாம் பாவம் செய்த போது பல தூதர்களை அந்த சமுதாயத்தில் எழுப்பி அவர்கள் எச்சரிப்பு செய்த பின் மனம் திரும்பாத போது தான் பாவிகளை இறைவன் அழித்தார் ....


இது இறை தண்டனை என்ற அடிப்படையில் தான்....


எப்படி என்றால் விபச்சாராம், கொலை, திருட்டு, போன்ற பாவங்களுக்கு இறைவன் குற்றவியல் சட்டத்தை கொடுத்தது போல தான் இதே நாம் காண வேண்டும்.....


குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறுவது போல..


இன்னும் உதாரணமாக கூற வேண்டும் என்றால்...


இந்திய அரசு ஒரு கொலை காரணே தூக்கில் போட சொன்னது போல தான்...


கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கபடுகிறது 


இந்திய அரசு கொலை செய்தவனின் உறவினர்களுக்கு மரண தண்டனை கொடுக்காது கொலை செய்தவன் தன் பாவத்தின் காரணம் மரண தண்டனை பெறுகிறான்.....


இதுவே பைய்பிளின் தேவனாக இருந்தால் கொலை செய்தவனின் உறவினர்களுக்கும் மரண தண்டனை கொடுத்து இருப்பார்...


ஆதாம் செய்த பாவத்திற்க்கு பாவமே செய்யாத நமக்கு மரணம் என்னும் தண்டனை கொடுத்தது போல....


#சரி 


#மரணம்_பற்றி_இஸ்லாம்_கூறுவது #என்ன.? என்று பார்ப்போம்.....


இஸ்லாம் கூறும் மனித படைப்பின் நோக்கம் இது தான்


👇👇👇👇👇👇


2. #உங்களில்_அழகிய_செயலுக்குரியவர் #யார்? #என்பதைச்_சோதிப்பதற்காக #மரணத்தையும்_வாழ்வையும்_அவன் #படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.


திருக்குர்ஆன்  67:2


மேற்கண்ட வசனத்தின் படி ஒரு மனிதன் தன் வாழ்க்கையே அழகிய முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும் அவன் சரியாக வாழ்கிறானா..? என்று சோதிப்பதற்க்காக தான் இறைவன் மரணத்தையும் அதில் ஒரு வாழக்கையும் கொடுத்து இருக்கிறான்....


#ஆதாம்_படைக்க_படும்_முன்னே 

மனித சமுகம் பூமியில் இரத்தம் சிந்தி மரணிக்கிற கூட்டம் தான் என்று இறைவன் வானவர்களுக்கு வெளிப்படுத்தி தந்ததை நாம் குர்ஆனில் பார்க்க இயலும்...


30. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? 


திருக்குர்ஆன்  2:30


இஸ்லாத்தை பொறுத்த வரை மனித சமுகம் மரணித்து தான் ஆக வேண்டும் என்று இறைவன் ஆதாமை படைக்கும் முன்னே முடிவு செய்துவிட்டான்....


இதனால் இஸ்லாம் கிறிஸ்தவம் கூறுவது போல் ஆதாமின் பாவத்தால் நாம் மரண தண்டனையும் பாவ சுபாவம் பெற்றோம் என்று இஸ்லாம் கூறவில்லை என்று மிக தெளிவாக நம்மால் உணர முடிகிறது....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

#கிறிஸ்தவர்கள்_கேட்க்கும்_ #இரண்டாவது_கேள்வி...


155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், #உயிர்களையும், பலன்களையும் #சேதப்படுத்தியும் #உங்களைச்_சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!


திருக்குர்ஆன்  2:155


மேற்கண்ட வசனத்தில் ஒரு மனிதனை கொண்டு மற்றொறு மனிதனை சோதிக்க இறைவன் மரணத்தை எற்படுத்துகிறான் இது தண்டனை இல்லையா...? என்று கேட்கின்றனர்...


இது போன்ற கேள்வி இறைவனே தேடுகிறவர்கள் கேட்ப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.....


நாத்திகன் தான் இப்படி பட்ட கேள்விகளை எழுப்புவான்.... 


இறைவன் நம்மை படைத்தவன் நம்மை சோதிக்கவும் நம் ஆயுளை குறைக்கவும் கூட்டவும் முழு ஆதிகாராமும் அவனுக்கு இருக்கிறது....


ஆதாம் உயிரோடிருந்த நாட்க்கள் தொளாயிரத்து முப்பது வருஷம் என்று பைய்பிள் கூறுகிறது....


ஆதியாகமம் 5:5


மனிதனுடைய ஆயுளை தீர்மாணிப்பவர் கடவுள் தான் என்று பைய்பிள் கூறுகிறது...


16 உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன; நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன. 


சங்கீதங்கள் 139:16


கடவுள் மனிதர்களுக்கு இடையே ஆயுளை கூட்டியும் குறைத்தும் சோதிக்க கூடியவர் தான் ...


பிறந்த உடனே ஒரு சில குழந்தைகள் மரணித்து விடுகின்றன இதனால் கடவுள் மீது நாம் குற்றம் காண முடியுமா..?


கடவுள் பிறந்த குழந்தையை ஆதாமின் பாவத்தின் காரணமாக தண்டித்தார் என்று சொல்லவும் கூடாது அந்த குழந்தையின் முலம் அந்த தாய் தந்தைக்கு எற்பட்ட சோதனை என்றே நம் விளங்க வேண்டும்...


இது தண்டனை அல்ல...

கடவுளின் சோதனை ஆகும்....


இன்னும் பைய்பிள் மிக தெளிவாக கூறுகிறது 

👇👇👇👇👇👇

7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும்,ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமா யிருக்கிறார். #அவர்_தாழ்த்துகிறவரும் #உயர்த்துகிறவருமானவர். 

1 சாமுவேல் 2:7


மனிதனை தாழ்த்தவும் உயர்த்தவும் அவர் தான் செய்கிறாராம் ஏன் கடவுள் இப்படி செய்கிறார்..? என்று நாம் கடவுளை பார்த்து கேள்வி கேட்க்க முடியாது இறை விசுவாசி கடவுளை கேள்வி கேட்க்கமாட்டான்....


இஸ்லாம் இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை வாழ்க்கை என்கிறது கடவுள் ஒருவரின் ஆயுளை குறைத்து மற்றவர்களை சோதிக்கிறார் என்றால் அதிலும் நன்மை நிச்சயம் உண்டாகும் என்கிறது இஸ்லாம்....


இறை சோதனையில் ஒருவன் உன்மையாக இறைவனை தேடினால் அதில் நிச்சயம் இறைவன் நன்மையை வைத்து இருப்பவராக இருக்கிறார்.....


👇👇👇👇👇👇

156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள்.


திருக்குர்ஆன்  2:156


157. அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.


திருக்குர்ஆன்  2:157


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்