கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான ஜாதிப் பிரிவுகள் உள்ளன.

 உலகில் உள்ள சமயங்களில் கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான ஜாதிப் பிரிவுகள் உள்ளன. 

**********************************

உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள் உள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.


( http://ta.wikipedia.org/s/dv )


இந்துக்களே ! 


இந்து மதத்தில் மட்டும்தான் அதிகமான ஜாதிப் பிரிவுகள் உள்ளன. ஆனால் எங்கள் கிறிஸ்தவ மதம் அப்படியல்ல. கிறிஸ்தவத்தில் எல்லோரும் சமம் எனக்கூறிக் கொண்டு உங்களை மதம் மாற்றும் நோக்குடன் வரும் கிறிஸ்தவ கும்பலுக்கு பதிலடி கொடுக்க இதைப் படியுங்கள்.


இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிப் பிரிவுகள் உள்ளதா? ஏன் கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் ஜாதிப் பிரிவுகள் இல்லையா ?


உலகில் உள்ள சமயங்களில் கிறிஸ்தவ மதத்தில் தான் அதிகமான ஜாதிகள் உள்ளன. ஆனால் இந்து சமயத்தில் தான் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக ஓர் மாயையை ஏற்படுத்தியது கிறிஸ்தவ மிஷனரிகளால் அனுப்பப்பட்ட பாதிரியார்களான மாக்ஸ் முல்லர், ராபர்ட் டி நொபிலி, வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி, ஜி யு போப், கால்டுவெல். ஆகிய பிரிவினை வாதிகளே.


இந்துக்களிடம் தான் பல ஜாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்றும், மற்றவர்கள் எல்லோரும் ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையில் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ந்து பரப்பி வருகின்றன.


உண்மையில் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதங்களிலும் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன•


ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்ல‍ப்படும் கிறிஸ்துவ மதத்தில் . . .


லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.


இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.


இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.


இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் நுழையமாட்டார்கள்.


இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.


இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ் சர்சுக்குள் நுழையமாட்டார்கள்.


இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள் நுழைய மாட்டார்கள்.


இப்படி கிறிஸ்தவர்களில் 146 பிரிவினர்கள் கேரளாவில் மட்டுமே இருக்கிறார்கள்.


மதமாற்றங்களை நியாயப்படுத்துபவர்கள், ‘ஜாதி கொடுமைகளால் மதம் மாறுகின்றனர்’ என பிரசாரம் செய்கின்றனர். உண்மை என்னவென்றால், ஜாதி கொடுமைகளை நீக்குவதாக சொல்லி மதமாற்றம் செய்யும் மதங்களில், ஜாதியம் அப்படியே நீடிக்கிறது.

அதாவது, இது பச்சையான ஏமாற்று வேலை.


ஜாதியம் இந்து சமுதாயத்தில் இருப்பதை விட கொடுமையாகவே இந்த ‘அமைதி’ மற்றும் ‘அன்பு’ மதங்களில் உள்ளன.


தமிழகத்தை எடுத்துக் கொண்டால்.... 


நாடார் கிறிஸ்தவர்கள், 

தலித் கிறிஸ்தவர்கள், 

வன்னியர் கிறிஸ்தவர்கள் 


என்று மதம் மாறிய பிரிவினர்கள் எல்லோரும் அவர்களது ஜாதியை கிறிஸ்தவ ஜாதியாக மாற்றி ஜாதி கிறிஸ்தவர்களாகவே வாழ்கிறார்கள்.


இப்படி மதம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பதும் நடக்கிறது.


அவ்வளவு ஏன், மாதாவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் ஏசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஏசுவைக் கும்பிடும் கிறிஸ்தவர்கள் மாதா வைக் கும்பிடுவதில்லை.


இரண்டுமே கிறிஸ்தவத்தின் கடவுள் என்றாலும் இவ்விரண்டு பிரிவினரும் ஏசுவையும் மாதாவையும் பரஸ்பரம் சாத்தான்களை ஏசுவதைப் போல ஏசுவார்கள்.


கிறிஸ்தவ சமயத்தின் பிரிவுகள்.

********************************************

சீர்த்திருத்தத்துக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான 4 பிரிவுகளாகப் பிரிந்ததாக கொள்ளப்படுகிறது.


1) உரோமன் கத்தோலிக்கம் ( Roman Catholic ) பைபிள் – 73 புத்தகங்கள்


2) கிழக்கு கிறிஸ்தவம் ( Eastern Orthodox ) - பைபிள் – 86 புத்தகங்கள்


3) சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரட்டஸ்தாந்து ( Protestant ) பைபிள் – 66 புத்தகங்கள்.


4) ஆங்கிலிக்கம் (Charismatic, Anglican ) பைபிள் – 76 புத்தகங்கள்.


கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள். 

**************************************

இந்த நான்கு பிரிவுகள் 25 பிரிவுகளாகப் பிரிந்தன. இந்த 25 பிரிவுகளில் இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஜாதிப் பிரிவுகள் தங்களுக்கென ஒவ்வொரு கிறிஸ்தவ சபைகளை உருவாக்கிக் கொண்டு மேலும் ஆயிரக்கணக்கில் பிரிந்தன.


ஒரு கிறிஸ்தவ ஜாதிப் பிரிவில் உள்ளவர்கள் மற்ற கிறிஸ்தவ ஜாதிப் பிரிவில் உள்ளவர்களை விரோதிகளாகவே பார்க்கின்றனர்.


இந்த கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள் சோஷல் கிளாசெஸ் (Social Classes) என அழைக்கப்படுகின்றன.


2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக் களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் தற்போது சுமார் 33,830 கிறிஸ்தவ ஜாதிப் பிரிவுகள் உள்ளன.


அதாவது கிறிஸ்தவ சமயம் ஒன்றாக இருந்து, பின்பு நான்காக பிரிந்து, அது 25 ஆக மேலும் பிரிந்து, தற்போது ஜாதிக்கொரு பிரிவாகப் பிரிந்து இன்று 33,830 கிறிஸ்தவப் ஜாதிப் பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.


இந்து சமயப் பிரிவுகள். 

*********************************

இந்து சமயம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்தியம் எனும் ஆறு பிரிவுகளாக இருந்து, பின்பு அவை எனும் சைவம், வைணவம் இரண்டு பிரிவுகளாக மாறி, பின்பு இந்து எனும் ஒரே சமயமாக ஆக்கப்பட்டது.


இந்தியாவில் சுமார் 1500 ஜாதிப் பிரிவுகள் உள்ளன. 


அதாவது கிறிஸ்தவ சமயம் 32,330 லீடிங்கில் உள்ளது.


கிறிஸ்தவர்கள் ஒரு ஜாதிப்பிரிவினரின் சர்ச்சுக்கு இன்னொரு பிரிவில் உள்ளவர்கள் செல்வதற்கு அனுமதி அளிப்பதில்லை.


ஆனால் இந்துக்களின் எந்த ஜாதியில் உள்ளவர்களும் எல்லா கோயில்களுக்கும் போகலாம்.


இப்பொழுது சொல்லுங்கள்,


உண்மையான பிரிவினைவாதிகள் யார்?

உண்மையான ஜாதித் துவேஷிகள் யார்?


இந்து சமயத்தவர்களா ? கிறிஸ்தவ சமயத்தவர்களா ?

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்