அரெபியர்களின் அறியாமை காலமும் அவர்களின் இறைமார்க்க பற்றும்
#அரெபியர்களின்_அறியாமை_காலமும் #அவர்களின்_இறை_மார்க்க_பற்றும்
அரெபிய சமுகத்திற்க்கு அல்லாஹ் அனுப்பிய தூதர்கள்...
ஹூத் அலை
ஸாலிஹ் அலை
இஸ்மாயில் நபி
#ஆது_சமூகமும்_ஹூத்_நபியும்
ஆது சமூதாயம் மிகப்பெறும் பழங்கால அரபு சமுதாயத்தவர்கள் ஆவார்கள்,,,
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை நம் தூதராக அனுப்பி வைத்தோம்
அல்குர்ஆன் : 11:50
#இவர்கள்_வாழ்ந்த_நிலப்பரப்பு
மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் -
#மணல்_குன்றுகளிலிருந்து_அச்சமூட்டி #எச்சரிக்கை_செய்ததை நபியே! நீர் நினைவு கூர்வீராக.
அல்குர்ஆன் : 46:2
“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, அழிக்கப்பட்ட #அவர்களுடைய_வீடுகளைத்_தவிர #வேறு_எதுவும்_காணப்படவில்லை -
அல்குர்ஆன் : 46:25
மேற்கண்ட வசனத்தின் படி ஆது சமுதாயம் வாழ்நத நிலப்பகுதி சமதளம் கிடையாது மணற்குண்றுகள் நிறைந்த பாலைவனம் என்று தெரியவருகிறது அவர்களின் பாவம் அதிகரித்த போது இறைவன் அந்த சமுதாயத்தை அழித்தார் என்றும் #அவர்கள்_வீடுகள்_ஒன்றும் #அழியவில்லை_என்றும்_இறைவன் #கூறுகிறான்...
இந்த வசனத்தை வைத்து ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டவர்கள் யமன் தேசத்திலுள்ள ஹல்ரமவுத் என்ற பகுதியை குறிப்பிடுகின்றனர்...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#ஸாலிஹ்_அலை
“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்);
(அல்குர்ஆன் : 7:73)
#ஸமூது_சமுதாயம்_வாழ்ந்த_நிலப்பகுதி
“ஹிஜ்ர் வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 15:80)
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் அதோ அழிந்து போன #அவர்களுடைய_வீடுகள்_அதோ #பாழடைந்து_கிடக்கின்றன
(அல்குர்ஆன் : 27:52)
மேற்கண்ட வசனத்தின் படி ஹிஜர் என்ற ஊரில் வாழ்ந்து உள்ளனர் என்றும் அவர்கள் வீடுகள் பாழடைந்து கிடக்கிறது என்றும் இறைவன் கூறுகிறான்...
#மலைகளை_குடைந்து_வீடுகள்_கட்டிய #சமுகம்
மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 26:149)
மேலும் இவர்கள் வாழ்ந்த நிலப் பகுதி பற்றி நபி ஸல் குறிப்பிடும் போது...
3379. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான “ஹிஜ்ர்“ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
மேற்கண்ட ஹதிஸ் ஆதாராத்தின் படி ஹிஜர் பகுதி மக்காவிலிருந்து தபூக்கிற்க்கு செல்லும் வழியில் இன்றும் உள்ளது உலகம் அழியும் காலம் வரை மக்களுக்கு அவர்களுடைய வீடுகள் நமக்கு படிப்பினையாக இருக்கிறது
ஹிஜர் என்ற ஊர் சவுதியின் தைமா,வுக்கு தென் மேற்கே உள்ள இடம் ஆகும்..
இன்று மதாயின் ஸாலிஹ் என்று இன்று அழைக்கின்றனர்...
Madain Saleh
Saudi Arabia
https://maps.app.goo.gl/8mMKHiX4MC2oJPyAA
https://youtu.be/q7V_mflr3Gs
#இஸ்மாயில்_நபி
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் #அவர்_தூதராகவும், #நபியாகவும்_இருந்தார் அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
(அல்குர்ஆன் : 19:54,55)
#இஸ்மாயில்_நபி_வாழ்ந்த_நிலப்பரப்பு...
மக்கா நகரத்தில் வசித்த இஸ்மயில் நபி
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும்
இருக்கவில்லை ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
#மக்கா_நகரத்தில்_கஆபா_ஆலயத்தை #கட்டிய_வரலாறு...
3364. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை இஸமாயில் அலை அவர்களை பார்க்க வராமல் விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு ஒரு நாள் இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்கு கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். நெடுநாட்கள் பிரிந்து மீண்டம் சந்திக்கும் போது தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துக் கொள்வார்களோ அப்படி நடந்துக் கொண்டார்கள் பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள் பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான் எனறு சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகள் இறைவன் உஙகளுக்கு கட்டளையிட்டதை நிறைவேற்றுஙகள் என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்றுதற்கு உதவுவாயா என்று கேட்க இஸ்மாயீல் (அலை) அவர்கள் உஙகளுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்டவேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று சொல்லிவிட்டு சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். #அப்போது_இருவரும்_இறையில்லம் #கஅபாவின்_அடித்தளஙகளை #உயர்த்திக்_கட்டினார்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை கற்களை கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டளானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்து தரலானார்கள். அப்போது இருவருமே இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய். (அல்குர்ஆன் 2-127) ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#அரெபிய_சமுகத்திற்க்கு_அனுப்ப_பட்ட #தூதர்கள்_என்றால்_இந்த_மூன்று #தூதர்களை_சொல்லாம்
இறைவனால் முன் காலத்தில் எச்சரிக்கை செய்யபட்ட சமுகமாக இருந்தாலும் பின் நாடகளில் இவர்களுக்கு எந்த தூதர்கள் வந்தாக இறைவன் குறிப்பிடவில்லை
ஆனால்
இறைவனை அல்லாஹ்வை அறிந்த சமுகமாகவே இருந்தனர்....
#அரெபியர்களின்_வழிக்கேட்டின் #கொள்கை
கஆபா ஆலயத்தில் நபி இப்ராஹிம் நபி இஸ்மாயில் அவர்களிடமும் பரிந்துரை செய்து இருந்தார்கள் அவர்களின் சிலைகளும் காஆபாவில் இருந்து உள்ளது இன்னும் பல சிலைகளும் அங்கு இருந்தன
புகாரி 4288
அல்லாஹ் ஒரே இறைவனாகவும் அங்கு இருக்கும் சிலைகளிடம் பரிந்துரை செய்து வந்தாகவும் இப்படிபட்ட காரணத்தால் அவர்கள் இனைவைப்பாளர்களாக ஆனார்கள் என்று இறைவன் கூறுகிறான்
👇👇👇👇👇👇👇
இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், #இவை_எங்களுக்காக #அல்லாஹ்விடம்_பரிந்துரைக்கும் #என்றும்_கூறுகின்றார்கள்.
(அல்குர்ஆன் : 10:18
சிலைகளிடம் பரிந்துரை செய்த காரணத்தால் பாவிகளாக ஆனார்கள்....
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#அரெபியர்கள்_தங்கள்_வாழ்க்கையில் #அதிக_அருவருப்பான_காரியங்கள்
👇👇👇👇👇👇👇
1)இறைவனை அறிந்து இருந்தும் இறைவனுக்கு இனை வைப்பு
2)விபச்சாாரம்
3)வறுமைக்கு பயந்து குழந்தைகளை உயிருடன் புதைக்கும் வழக்கமும்
4)சாராயம் குடிப்பதும்
5)உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர் ஜாதி பிரச்சனைகள்
இப்படி பட்ட பல பாவமான காரியங்கள் அவர்களிடம் மேலோங்கி இருந்தன...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#இஸ்லாம்_முழுமை_அடையாத
#காலத்தில்_அரெபியர்களிடம்_இருந்த
#இறை_கட்டளைகள்_நம்பிக்கைகள்
👇👇👇👇👇👇👇
வானத்தையும் பூமியையும் படைத்ததும் யார்?
மனிதனுக்கு செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்?
உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன் யார்?
காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்டாலும் அரெபியர்கள் "அல்லாஹ்'' என்று தான் கூறுவார்கள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
31. "வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!
அல்குர்ஆன் 10:31
அல்குர்ஆன் 29:63
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இஸ்மாயில் நபியின் வழியின் முலம் வந்த அரெபியர்கள் விருத்தசேதனம் செய்யும் வழக்கமும் அவர்களிடம் இருந்து உள்ளது...
புகாரி 7
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#மேலும்
நபி ஸல் இஸ்லாத்தை எடுத்து சொல்லும் முன்னே மக்காவில் சிலை வழிபாட்டில் நுழையாத முஸ்லிம்களும் சிலைக்கு படைக்க பட்ட உணவே உண்ணாமல் வாழ்ந்து வந்த முஸ்லிம்களும் வாழ்ந்து உள்ளனர்...
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
3826. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
*#நபி_ஸல்_அவர்கள்_தமக்கு_வேத #வெளிப்பாடு_வஹீ_அருளப்படுவதற்கு #முன்பு கீழ் 'பல்தஹில் ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷிகளின்) பயணஉணவு ஒன்று நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் இப்னு அம்ர் உண்ண மறுத்துவிட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகளிடம்), 'நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன்' என்று கூறினார்கள். ஸைத் இப்னு அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்டவற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், 'ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக பூமியிலிருந்து (புற் பூண்டுகளை முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரால்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட் கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலம் இப்படிச் செய்கிறீர்கள்' என்று கூறி வந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்
மார்க்கம் முழுமை அடையாத காலமாக இருந்தாலும் ஒரு சிலர் நேர்வழியில் இருந்து உள்ளார்கள் ஆனாலும் அவர்கள் பாவமான காரியங்களில் மேலோங்கி எச்சரிக்கை செய்யபாடாத சமுகமாக இருந்த காரணத்தால் அவர்களின் சமுகத்தில் நபி ஸல் அவர்களை இறுதியாக அல்லாஹ் எழுப்பினார்.......
19. #வேதமுடையோரே "எங்களுக்கு நற்செய்தி கூறுபவரோ, எச்சரிக்கை செய்பவரோ வரவில்லை'' என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக
#தூதர்களின் #வருகை_நின்று_போயிருந்த #காலகட்டத்தில்
#நம்முடைய_தூதர்_முஹம்மத் உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார் நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 5:19
தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நபி ஸல் அவர்களை அல்லாஹ் இந்த முழு உலகத்துக்காக எழுப்பினார்....
Comments
Post a Comment