நபி ஸல் அவர்கள் பெண் பித்தரா.?
நபி ஸல் அவர்கள் ஒரு பெண் பித்தர் (நவுதுபில்லாஹ்) பல பெண்களை சுகத்திற்க்காக திருமணம் முடித்தார் என்ற குற்றசாட்டை கிறிஸ்தவர்கள் வைக்கின்றனர் அவர்களுக்கான பதிலை பார்ப்போம்.......
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நபி ஸல் பல பெண்களை திருமணம் செய்ய ஒரு அரசை நிறுவினார் என்று ஒரு சிலர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் நபி ஸல் பல பெண்களை திருமணம் செய்ய அரசாராக தீர்க்கதரிசியாக காட்ட வேண்டிய அவசியம் அந்த காலத்தில் இல்லை காரணம் நபி ஸல் இறை தூதராக தேர்ந்து எடுக்க படுவதற்க்கு முன்பு அறியாமை காலத்தில் பலதாரமணம் என்பது மிக சாதாராண காரியமாக இருந்தது நான்கு வகையான திருமணங்கள் அறியாமை காலத்தில் இருந்தது உதாரணமாக புகாரி 5127 மிகவும் மோசமான ஒரு கால கட்டம் அது திருமண உறவு என்ன என்பது கூட தெரியாத கால கட்டம் இஷ்டம் போல் பெண்களிடம் காமத்தை தணிக்கும் கூட்டமாக அறியாமையின் காலம் அது.....
இப்படி பட்ட காலத்தில் பெண்களை எதற்க்காக திருமணம் செய்யனும் என்ன நோக்கத்திற்க்காக திருமணம் செய்யனும் என்பதை நபி ஸல் அவர்கள் இறை தூதராக ஆன பின் அந்த அறியாமை கால மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்....
#உதாரணமாக....
5090. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்““ ஒரு பெண் மணமுடிக்கப்பட வேண்டும் என்றால் அந்த பெண் மார்க்க நல்லொழுக்கத்திற்காக திருமணம் முடியுங்கள் எனவே, மார்க்க நல்லொழுக்கம் உடையவளை மணந்து வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
ஒரு பெண்னே திருமணம் முடிக்கும் போது அந்த பெண் மார்க்க பற்று உள்ளவாளாக இருக்கனும் அவளுடன் திருமணம் முடிக்கும் ஆண் அவணும் மார்க்க பற்று உள்ள நல்லொழுக்கம் உடையவானக மாற வேண்டும் காட்டு மிறாண்டிகளாக வாழ்ந்த மக்களை நல்லொழுக்க மக்களாக மாற்றினார்...
அதிக பெண் மோகம் கொண்டு விபச்சாரத்தின் பக்கம் சென்று விடாதே சின்ன வீடு என்று ஊருக்கு தனிமையாக பெண்களை வைக்காதே என்று எச்சரித்தார்.....
5 கணவனில்லாத பெண்களையும் #வைப்பாட்டிகளாக்கிக்_கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது
திருக்குர்ஆன் 5:5
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
#நபி_ஸல்_அவர்கள்_பெண்_பித்தரா.?
நபி ஸல் உன்மையாக பெண் பித்தர் என்றால் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன் வந்து இருக்கமாட்டாங்க மாறாக நபி ஸல் அவர்களை மனம் முடிக்க பெண்களே போட்டி போட்டார்கள் என்று ஹதிஸ்களில் பார்க்க முடியும்....
#உதாரணமாக
2310. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! #என்னை_உங்களுக்கு #அன்பளிப்பாகத் தந்து விட்டேன்!“ என்றார். அங்கிருந்த ஒருவர் “இவரை எனக்கு மணம் முடித்துத் தாருங்கள்!“ என்று கேட்டார். “உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 40. வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)
மேற்கண்ட ஹதிஸில் நபி ஸல் அவர்களை கண்டு உங்களிடம் என்னை அன்பளிப்பாக எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறாள் நபி ஸல் அந்த பெண்னே வேறு ஒருவருக்கு திருமணம் முடித்தார்
#இன்னோறு_உதாராணம்
5101. உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) கூறினார் நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம், “இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!““ என்று கூறினேன். அதற்கவர்கள், “இதை நீயே விரும்புகிறாயா?“ என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், “ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்““ என்றேன். அதற்கு அவர்கள், “என்னை அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று““ என்றார்கள். நான் “தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!““ என்று கேட்டேன். “(அதாவது என் துணைவியார்) உம்முஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?“ என நபியவர்கள் கேட்க, நான் “ஆம்“ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மமடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனென்னில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுபைவா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்““ என்று கூறினார்கள். 36 அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்: ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நி எதிர்கொண்டது என்ன?“ என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது““ என்று கூறினார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
👆👆👆👆👆👆👆👆👆👆
#மேற்கண்ட_ஹதிஸின்_படி நபி ஸல் மனைவியர்களில் ஒருவர் தன் சகோதரியை திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் என்று நிர்பந்த்திக்கிறார் ஆனால் நபி ஸல் அந்த பெண்னே திருமணம் செய்யவில்லை நபி ஸல் பெண் பித்தர் என்றால் (நவுதுபில்லாஹ்) அந்த பெண்னே திருமணம் முடித்து இருக்கலாம் நபி ஸல் அந்த பெண்னே நிராகரித்தார் ...
#மற்றொறு_உதாராணம்
5100. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் “தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?“ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், “அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்““ என்று கூறினார்கள். 35 இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
👆👆👆👆👆👆👆👆👆👆
#மேற்கண்ட_ஹதிஸின்_படி
நபி ஸல் பல பெண்களை திருமணம் செய்து இருந்தாலும் அவருக்கு தங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து கொடுக்க அனேகர் ஆர்வமாக இருந்தனர் அவர் பெண் பித்தராக இருப்பார் என்றால் (நவுதுபில்லாஹ்) அந்த பெண்களை முடித்து இருப்பார் ஆனால் நபி ஸல் பலபெண்களை திருமணம் செய்ய முடியாது என்று ஒதுங்கினார் ...
#இறுதியாக_இன்னோறு_சிறந்த
#உதாராணம்
2713. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (திருக்குர்ஆன் 60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்களில் ஏற்றுக் கொள்கிறவரிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத் தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம் #விசுவாசப்_பிரமாணம் #வாங்கும்போது_எந்தப்_பெண்ணின் #கையையும்_தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்ச் சொல் வழியாகவே தவிர விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 54. நிபந்தனைகள்
அதிக பெண் மோகம் நபி ஸல் கொண்டவர் என்றால் விசுவாச பிராமாணம் எடுக்கும் போது பல பெண்களின் கையே தொட வாய்ப்பு கிடைத்து இருந்தும் அவர் பெண்களின் கைகளை தொட்டதும் இல்லை நபி ஸல் இந்த நற்பண்பு ஒன்றே போதுமானாது நபி ஸல் அதிக பெண் மோகம் உடையவராக இருக்கவில்லை என்பதற்க்கு இது எல்லாம் சிறந்த உதாராணம்.....
நபி ஸல் பல திருமணங்கள் செய்து இருந்தார்கள் தான் அனைத்தும் பெண் சுகத்திற்க்காக செய்தார் என்ற வாதம் மேற்கண்ட செய்தியின் படி தவறான கருத்து என்பது 100% உர்ஜிதம் ஆகிறது
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இறைவனே கூறிகிறார் நபி ஸல் அதிக நற்பண்பு உடையவர் என்று....
மேலும், நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
திருக்குர்ஆன் : 68:4
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பலதார மனம் செய்த முஹ்மது நபி பெண் பித்தர் (நவுதுபில்லாஹ்) என்று அவதூறு பரம்பும் கிறிஸ்தவர்களிடம் நம்முடைய கேள்வி....
படி பலதார மணம் செய்தால் பெண் பித்தர்கள் என்றால்.....?
பைய்பிளின் தேவனின் தீரக்கதரிசகள் பலர் பலதார மணம் செய்து உள்ளார்கள் அவர்கள் அனைவரும் பெண் பித்தர்களா..?
பெண் பித்தர்களை கொண்டு ஏன் மற்ற ஜனங்களுக்கு தீ்ர்க்கதரிசாயாக கர்த்தர் வழி நடத்தினார்..?
இதற்க்கு கிறிஸ்தவ சமுகம் பதில் சொல்லுமா...?
Comments
Post a Comment