சொர்க்கத்தில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன் உண்டா.?

 #சொர்க்கத்தில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன் உண்டா.? 


என்ற கேள்வியே தவறான கேள்விகள் ஆகும்...


இப்படி பட்ட கேள்வியை கிறிஸ்தவ சகோதரர்கள்  நம்மிடையே கேட்கிறார்கள் அவர்களுக்கான பதிலை காண்போம்....


ஆண்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தாலும் அது ஒழுக்க கேடு என்று இந்த உலகம் சொல்லாது இது நடை முறையில் இருக்கும் காரியமே....


பைய்பிளில் கூட கர்த்தரால் வழி நடத்த பட்ட தீர்க்கதரிசிகள் ராஜாக்கள் பலர் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் குடும்பம் நடத்தி உள்ளார்கள்....


#ஆனால்_பெண்கள்_விசயத்தில் 


உலகில் உள்ள பெண்களை எடுத்துக்கொள்ளுவோம் எந்த பெண்ணும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை ஒரே நேரத்தில் மணந்து தன்னுடன் வாழ வேண்டும் என்று எண்ணம் கொள்ளமாட்டார்கள்.....


இப்படி பட்ட எண்ணம் கொண்டு இருக்கும் பெண்களை இறைவன் ஒழுக்கம் கேட்டவர்கள் என்று கூறுகிறான்.....


ஒரே நேரத்தில் இரு கணவர்களுடன் வாழ கூடாது என்று இறைவனின் சட்டமும் இருக்கிறது.....


கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. 

(அல்குர்ஆன் : 4:24)


#திருமணம்_முடித்த_பெண்கள்_தன்_ஒரே #கணவனே_வீட்டு_மானக்கேடானா #காரியங்களை_செய்தால்_தண்டனைகள் #கொடுக்கபடனும்_என_இறைவன் கூறுகிறார்.....


பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனை விதிக்கப்பெறும்; 

(அல்குர்ஆன் : 4:25)


இறைவன் பெண்களின் கற்பு விசயத்தில் இவ்வுலகில் இறைவன் எற்படுத்திய சட்டம் ஆகும்....


இப்படி இருக்க பூமியில் ஒரே ஆணுடன் தான் குடும்பம் நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கும் இறைவன் மறுமையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் மனைவிகளாக இருக்க வைப்பான் என்ற அடிப்படை இறை சட்டத்திற்க்கு மாற்றமான கொள்கை ஆகும்.....


ஆண்களுக்கு பல தாரமணம் இம்மையிலும் உண்டு ஆதனால் அதை மறுமை வாழ்க்கையிலும் இறைவன் விதிப்பது தவறு ஆகாது.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இறைவன் இந்த உலகில் என்ன என்ன சிறப்புகளை கொடுத்தானோ அதை விட சிறப்பான வாழ்க்கை இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் எற்படுத்தி உள்ளான் ....


124. ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.


திருக்குர்ஆன்  4:124


97. ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை #மகிழ்ச்சியான_வாழ்க்கை_வாழச் #செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.


திருக்குர்ஆன்  16:97


மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் பார்க்கும் போது ஆண்களுக்கு பெண்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கை இம்மையில் உண்டு என்று இறைவன் கூறுகிறான்....


#ஆண்களுக்கு_துனை_இருக்கையில் #பெண்களுக்கு_துனை_கிடையாதா....?


என்ற கேள்வி வரும்.....


அதற்க்கான பதிலை பார்ப்போம்....


”யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்தொடர்ந்தார்களோ #அவர்களுடன்_அவர்களின்_சந்ததிகளை #சொர்க்கத்தில்_ஒன்று_சேர்ப்போம்.


அல்குர்ஆன் 52:21


இந்த வசனத்தில் பெற்றவர்களுடன் சந்ததிகளை சேர்த்து வைப்பது பற்றி சொல்லப்படுகிறது. இதன் படி அந்த சந்ததிகளின் பெற்றவர்கள் சொர்க்கவாசிகள் எனும் போது அவர்களின் (அந்த பெற்றோர்) இணைந்திருப்பார்கள் என்று தான் அர்த்தமாகிறது.


#மேலும்


ஒரு சிலர் கூறுகின்றனர் வேறு நபர்கள் கணவர்களாக கொடுக்க படலாம் என்கின்றனர் இப்படி நம்பினால் மேற்கண்ட குர்ஆன் வசனம் முறன்படும் மேலும் நபி ஸல் மனைவிமார்கள் அன்னையர்களுக்கு வேறு ஒரு கணவர்கள் கிடைப்பார்களா..? 


என்ற மடத்தனமான அபத்தமான கேள்விகள் வரும் என்பதை யோசிக்க மறந்துவிட்டார்கள்......


#சொர்க்கத்தில்_பெண்ணுகளுக்கு_ஒரு #கணவன்_தான்


#மற்றொறு_ஆதாராம்...


arrated 'Aishah:


that Jibril came to the Prophet (ﷺ) with her image upon a piece of green silk cloth, and he said: "This is your wife in the world, and in the Hereafter."


ஜிப்ரில் நபி (ﷺ) அவர்களிடம் பச்சை பட்டுத் துணியின் மீது தனது உருவத்துடன் வந்து, அவர் கூறினார்: "இந்த உலகத்திலும், மறுமையிலும் உங்கள் மனைவியாக இருப்பார்."


Sahih (Darussalam)


English : Vol. 1, Book 46, Hadith 3880 

Arabic : Book 49, Hadith 4254

Jamiat Tirmidhi


மேற்கண்ட ஹதிஸின் படி அன்னை ஆயிஷா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு மனைவியாக மறுமையிலும் இருப்பார்கள் என்று வருகிறது ....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


மறுமையில் கட்டிய கணவனே தனக்கு கணவனாக ஆக வேண்டும் என்பது தான் ஒவ்வொறு பெண்ணும் ஆசை படுவாள் அவளின் பிரார்த்தனையும் இயற்க்கையாக அது தான் இருக்கும் இறைவனின் நாட்டமும் அது தான் ஒவ்வொறு பெண்ணுக்கும் தான் கட்டிய கணவனே ஜோடியாக ஆக்கி வைப்பான்....


எல்லாம் வல்ல அல்லாஹ் சரியானதை அறிந்து கொள்ள அனைவருக்கும் நல்லலுதவி செய்வானாக....

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்