கறை படிந்த வேதம்

 வஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு......

கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் எந்த தீர்க்கதரிசியும் வேதங்களின் எழுத்து மாற்றபட்டது எனவும் மனித கரம் அடங்கிய பொய்யான வார்த்தைகள் என்று கூறவே இல்லை என்று கூறுவார்கள் அவர்களின் அறியாமைக்கான நம்முடைய பதில்.......


♥♥♥♥♥♥♪♪♪♪♪♪♪♥♥♥♥♥♥

முதலில் அவர் பின் பற்றும் பைய்பிளில் இருந்து காண்போம்....

♥♥♥♥♥♥♪♪♪♪♪♪♪♥♥♥♥♥♥


#எரேமியா_தீர்க்கதரிசி வேதத்தை பற்றி கூறுகிறார்...


8 நாங்கள் ஞானிகளென்றும், #கர்த்தருடைய #வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, #வேதபாரகரின்_கள்ள #எழுத்தாணி_அதை #அபத்தமாக்குகிறது. 

எரேமியா 8:8


9 ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள், இதோ, #கர்த்தருடைய #சொல்லை #வெறுத்துப்போட்டார்கள், #அவர்களுக்கு #ஞானமேது? 

எரேமியா 8:9


மேற்கண்ட வசனம் மிக தெளிவாக கூறுகிறது கர்த்தரின் வேதம் உன்மையான வேதமாக யூதர்களிடம இல்லை வேதபாதகரின் கள்ள எழுத்துக்களும் அதில் அடங்கி இருக்கு வேதத்தை குறித்தான எந்த ஞானமும் அவர்களிடம் இல்லை மிக தெளிவாக கூறுகிறார்...


#இதை_தான்_இயேசுவும்_கூறுகிறார்...


44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், #சத்தியம் (வேதம்) #அவனிடத்திலில்லாதபடியால் #அவன் #சத்தியத்திலே #நிலைநிற்கவில்லை, #அவன்_பொய்யனும் #பொய்யுக்குப் #பிதாவுமாயிருக்கிறபடியால் #அவன் #பொய்பேசும்போது #தன்_சொந்தத்தில் #எடுத்துப்_பேசுகிறான்.


யோவான் 8


யூதர்களிடம் சத்திய வார்த்தைகளே இல்லை யூத இனம் சத்தியத்தில் நிலைநிற்க்கவில்லை என்று மிக தெளிவாக இயேசு கூறுகிறார்


#ஆனால் 


இதில் இன்னோறு விசயமும் நாம் விளங்க வேண்டும்... 


நான் மறைக்கவும் இல்லை இயேசு பல நேரங்களில் வேதத்தில் உள்ள வசனங்களை எடுத்து காட்டியும் பேசி உள்ளார் என்பதே நாம் மறைக்கவும் கூடாது...... 


#அதை_இயேசு #யூதர்களிடம்_சத்திய #வார்த்தைகளை #அவனிடத்திலில்லை என்றும் கூறியிருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்..... 


#எரேமியா_தீர்க்கதரிசியும்_வேதத்தில் #கள்ள_எழுத்துக்களும்_இருக்கிறது #என்கிறார்...


பொய்யும் சந்தியமும் வேதத்தில் அடங்கி இருக்கிறது என்று இதன் முலம் நாம் அறிந்துக் கொள்ளலாம்...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

#முந்தைய_வேதங்களை_குறித்து #குர்ஆன்_என்ன_கூறுகிறது_என்பதே பார்ப்போம்....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

44. தவ்ராத்தை நாம் அருளினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டதாலும், அதற்குச் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே (ஏகஇறைவனை) மறுப்பவர்கள்.


திருக்குர்ஆன்  5:44


நபி ஸல் காலத்தில் முந்தைய வேதங்களில் உள்ள பழிக்கு பழி வாங்க கூடிய தண்டனைக்கு உரிய சட்டங்கள் பாதுகாக்க பட்டு் இருந்தன என்று நாம் இதன் முலம் அறிய முடிகிறது


♥மேலும் குர்ஆன் கூறுகிறது♥


15. வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். #பலவற்றை #அலட்சியம்_செய்து_விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.


திருக்குர்ஆன்  5:15


3, 4. 👉முஹம்மதே! உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை👈 அவன் உமக்கு அருளினான். 


👉இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்துகிறது.👈 


இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். 


👉பொய்யை விட்டு உண்மையைப் 

பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். 👈


அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.


திருக்குர்ஆன்  3:4


திருக்குர்ஆன் முந்தைய வேதம் முழுமையாக கறை பட்டு விட்டது என்று எங்கேயும் கூறவில்லை பொய்யும் சத்தியமும் கலந்து இருந்தன என்றே கூறுகிறது ...


♥முந்தைய வேதம் குறித்து நபி ஸல் ஹதிஸ் கூறிய செய்தி♥


7362. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

வேதக்காரர்(களான யூதர்)கள் 


####தவ்ராத் வேதத்தை#### 


 ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) 


####நம்பவும் வேண்டாம்#### 


; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். மாறாக, (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப் பெற்றதையும் உங்களுக்கு அருளப்பெற்றதையும் நம்புகிறோம்' என்று கூறினார்கள்.97 

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 96. இறைவேதத்தையும் நபிவழியையும் கடைப்பிடித்தல்


முந்தைய வேதத்தில் பொய்யும் சந்தியமும் கலந்து இருந்தன என்றே குர்ஆனும் நபி மொழியும் கூறுகிறது....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


81.இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.


திருக்குர்ஆன்  17:81

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்