பெண்களின் மாதவிடாய் பிரச்சனை ஒர் திட்டா...?

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹூ பர்க்காத்துஹூ..


மனுஷ்ய புத்திரன் என்ற கிறிஸ்தவர் நம்மிடம் கேட்ட கேள்வி...?


நபி ஸல் அவர்கள் தங்கள் மனைவியர்களின் மடியில் படுத்துக் கொண்டு இறைவேதம் ஒதியவராக இருந்து உள்ளார் குர்ஆன் 2:222 ல் மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் உடல் உறவு வைக்க கூடாது அவர்களிடம் இருந்து விலகி இருங்கள் என்று குர்ஆன் சொல்லி இருக்க இது போன்ற நேரத்தில் நபி ஸல் தங்கள் மனைவியர்களின் மடியில் படுத்துக் கொண்டு இறைவேதத்தை குர்ஆனை ஒதுவது சரியா..? என்று இவர் கேட்க்கிறார் 


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இவரின் கேள்விகளுக்கான பதிலை காண்போம்......


🙍🙍🙍👰🏻👰🏻👰🏻

பெண்களின் மாதவிடாய் பிரச்சனையே இஸ்லாம் ஒர் திட்டாக என்னவே இல்லை....


நபி ஸல் மாதவிடாய் பெண்களை ஒரு திட்டு உள்ள பெண்களாக ஒதுக்கி வைக்கவும் இல்லை......


மாதவிடாய் என்பது ஒரு நரம்பு நோய் அது ஒரு சில குறிப்பிட்ட நாளில் தொடங்கி அது தானாக சரியாகிவிடும் இது போன்ற நேரத்தில் பெண்களுக்கு இரத்த உபாதை எற்படும் ஒரு சில பெண்களுக்கு அதிகமாக இரத்த உபாதை  எற்பட்டுவதும் உண்டு அதனால் அவர்கள் மருத்தவனையில் அனுமதிக்க படவும் செய்கின்றனர் இதற்கு ஈஸ்டோஜென் எனும் ஹார்மோன் தான் காரணமாகிறது மற்றும் இது போன்ற நேரத்தில் பெண்களுக்கு கடுமையான வயிற்று வலிகள் எற்படுவதும் உண்டு இன்று உலகின் இந்த பெண்களின் மாதவிடாய் பிரச்சனையே ஒரு திட்டாக என்னி கோவிலுக்கு செல்ல கூடாது மற்ற விட்டு பணி சமுக பணிகள்  போன்ற காரியங்களில் தள்ள படுவதை நாம் பார்க்கிறோம் குறிப்பாக இவர்களின் கிருஸ்தவ பைய்பிளில் நாம் காணலாம்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#பைய்பிளின்_பெண்களின்_மாதவிடாய் #தீட்டு_பற்றி..


19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள், அவளைத் தொடுகிற எனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.


 3. லேவியராகமம் 15 :19 


20 அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.


 3. லேவியராகமம் 15 :20 


21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.


 3. லேவியராகமம் 15 :21 


22 அவள் உட்கார்;ந்த மனையைத் தொடுகிறவன்; எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.


 3. லேவியராகமம் 15 :22 


23 அவன் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.


 3. லேவியராகமம் 15 :23 


24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக, அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.


 3. லேவியராகமம் 15 :24

⛪⛪⛪⛪⛪⛪⛪


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


மாதவிடாய் பெண்களை அன்றேய கால யூதர்கள் பெண்களை தீட்டாக எண்ணி ஒதுக்கி வந்தார்கள் அதற்க்கு காரணம் மேற்கண்ட பைய்பிள் வசனங்களே இந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.

👇👇👇👇👇👇

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

#யூதர்கள்_மாதவிடாய்_ஏற்பட்ட #பெண்களுடன்_அமர்ந்து #சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.


(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர். முஸ்லிம் 507

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


இஸ்லாம் மார்க்கத்தில் மாதவிடாய் பெண்களுடன் தாராளமாக ஒன்றாக இருந்து சாப்பிடலாம், தங்கலாம் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்’ என்றார்” என ஹிஷாம் அறிவித்தார். புகாரி 296


‘நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 301 முஸ்லிம் 497, 499


இந்த ஹதீஸ்கள் மூலம் மாதவிடாய்க் காலத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ளாம் தெடர்ந்து வரும் ஹதீஸை கவனியுங்கள்


‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 297 முஸ்லிம் 506


‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 300


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப் பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். முஸ்லிம் 505.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


♥மாதவிடாய் காலங்களில் பெண்கள் இறைவனே புகழ்ந்து துதிக்கலாம்.......

புகாரி 324


♥மாதவிடாய் பெண்கள் நன்மையான எந்த காரியங்களும் செய்யலாம் இஸ்லாமிய பிராச்சாரத்திலும் பங்கு கொள்ளாம் இது போன்ற காரியங்கள் சிரமத்துக்கு உள்ளாகும் என அவர்கள் கருதினால் செய்யாமலும் இருக்கலாம் 

புகாரி 1652


♥பெருநாள் தொழுகையில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் தொழுகை செய்யும் கணவர்களுக்கு உதவிகள் செய்யலாம் நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள் மாதவிடாய் என்பது பெண்கள் மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் தீட்டான காரியம் (நோய்) அல்ல அது ஒரு இயற்கை உபாதை தான் ஒரு நரம்பு நோய் அதனால் பெண்களை தீட்டாக என்னுவதை விரும்பவில்லை இஸ்லாம் அப்படி அனுமதிக்கவும் இல்லை 


503.முஸ்லிம்


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இஸ்லாத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய கூடாத காரியம்.....


43. குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! 


திருக்குர்ஆன்  4:43


306. “பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?“ என்று கேட்டதற்கு, “அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்“ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய் 


இது போன்ற குர்ஆன் ஹதிஸ்களை காட்டியும் இஸ்லாம் பெண்களை மாதவிடாய் நேரத்தில் திட்டாக என்னுகிறது என்றும் இறைவனை தொழுகை செய்ய அனுமதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கின்றனர் உன்மையில் இஸ்லாம் மாதவிடாய் பெண்களே குறித்து இஸ்லாம் கூறுவதாகவும் கருதி விடவும் கூடாது...


#காரணத்தை_பார்ப்போம்..


🙇💭🙇💭🙇💭


அல்லாஹ் கூறுகிறான்..


📖 அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள இயலாத அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதில்லை


திருகுர்ஆன் 2:286


📚 4546. மர்வான் அல்அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் - அவர் இப்னு உமர்(ரலி)தாம் என்று எண்ணுகிறேன் - “உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான்.“ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (“அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை“ எனும் 02:286 வது) இறைவசனம் மாற்றிவிட்டது“ என்று கூறினார்கள். 

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை


மேற் கண்ட குர்ஆன் ஹதிஸ்களில் ஒரு சாராசரி மனிதனின் சக்திக்கு உட்பட்ட காரியங்கள் செய்தால் அவன் மிக சிரமத்துடன் செய்தால் அந்த காரியங்களை இறைவன் விரும்பவில்லை என்பது நமக்கு தேரியவருகிறது 

👆👇👆👇👆👇

மேலும் இறைவன் கூறுகிறான் துக்கம் மற்றும் பசியின் காரணத்தால் தொழுகையே பிறபடுத்தி செய்யலாம் என்று பின்பு தொழுகை செய்யலாம்

 தொழுகை நேரத்தில் உங்களுக்கு துக்கம் வந்தா சிறிது நேரம் துங்கிவிட்டு அதன் பின் தொழுது கொள்ளுங்கள் உங்களை சிரமத்துக்கு அல்லாஹ் உண்டாக்க மாட்டான் 


📚 1440. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் தொழும்போது கண்ணயர்ந்துவிட்டால், அவர் தம்மைவிட்டுத் தூக்கம் அகலும்வரைத் தூங்கிவிடட்டும்! ஏனெனில், உங்களில் ஒருவர் உறங்கியவாறே தொழுவாரானால் அவர் (உணர்வில்லாமல்) பாவமன்னிப்புக் கோரப்போக, அவர் தம்மைத்தாமே ஏசி (சபித்து)விடக்கூடும்.- இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்


#மேலும் 


தொழுகை நேரத்தில் இமாம் இகாமத் கொடுத்துவிட்ட நேரத்தில் உங்களுக்கு பசி ஏற்படுகிறதா நீங்கள் முதலில் உங்கள் உண்னுங்கள் தொழுகைகாக  அவசரமாக உண்ண வேண்டாம் உங்களின் பசி அறிய பின்னே தொழுகை


📚 673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ”உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.)  என இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு


#மேலும்_அல்லாஹ்_கூறுகிறான் ..


பயண நேரத்தில் தொழுகைய அல்லாஹ் சிரமபடுத்த மாட்டான்...


📚 4299. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  நாங்கள் ஒரு பயணத்தின்போது நபி(ஸல்) அவர்களுடன் தொழுகையைச் சுருக்கித் தொழுதவர்களாக பத்தொன்பது நாள்கள் தங்கினோம்.  (பொதுவாக) நாங்கள் (பயணம் மேற்கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாள்கள் வரை சுருக்கித் தொழு(தபடி தங்கு)வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும்போது (சுருக்கித் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்


நபி ஸல் அவர்கள் பயணம் என்பது நீண்ட நேரம் உள்ள பயணம் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு ஊர்களுக்கு சென்றாலும் ஓட்டகத்தில் அல்லது நடை பயணமாக தான் செல்லுவார்கள் ஆதனால் தொழுகையே சுருக்கி கொள்ளுவார்கள் அதை போல் நீண்ட நேரம் தரக் கூடிய  பயணம் செய்தால் நாமும் தொழுகையே சுருக்கி கொள்ளாம்


#மேலும்_அல்லாஹ்_திருகுர்ஆனில் உங்கள் பயணத்தில் அச்சம் உண்டு என்றால் தொழுகையே சுருக்கி கொள்ளுங்கள் அல்லாஹ் மனிதர்களே சிரமபடுத்துபவன் அல்ல


📚 101. நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது நிராகரிப்போர் உங்களைத் துன்புறுத்த கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. 


திருக்குர்ஆன்  4:101


#மேலும் நீண்ட நேரம் பயணம் மேற் கொள்ளும் நேரத்தில் அதிக நேரம் எடுக்க கூடிய பயணமாக இருந்தால் இது போன்ற நேரத்தில் உங்களுக்கு சிரமாக இருந்தால் நோன்பு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை 


📚 2044. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்; விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 13. நோன்பு


👆👆👆👆👆👆


மேலே பார்த்த பல காரியங்களின் முலம் அல்லாஹ் மனிதர்களுக்கு எத்தகைய சிரமத்துக்கும் உள்ளான பணிகளை செய்ய விரும்பவில்லை என்று நமக்கு தெரியவருகிறது இது போன்று ஒன்று தான் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையும் ஒரு பெண் மாதவிடாய் காலங்களில் அவளுக்கு ஏற்படும் பிரச்சனையே கூறித்து மேலே விளக்கி இருந்தேன் இது போன்ற காரணங்களினால் பெண்கள் சிரமத்துக்கு உள்ளாக வேண்டாம் என்பதற்காகவே தொழுகையே இறைவன் தடை செய்தான் மேலும் மாதவிடாய் காலத்திலும் பெண்களை தீட்டு உள்ள பெண்களாக கருதாமல் அவர்களை கண்ணியம் உள்ள பெண்களாக காட்டும் படி இஸ்லாம் போதிக்கிறது......


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


நம்மிடம் இந்த கேள்வியை கேட்ட கிறிஸ்தவரிடம் நாம் கேட்ப்பது முன்று கேள்விகள் தான்..? 


1)இன்றயே காலத்தில் உங்கள் வீட்டு கிறிஸ்தவ பெண்களை மாதவிடாய் நேரத்தில் அவர்களை ஒதுக்கி வைப்பது பைய்பிளே படிக்க கூடாது இறைவனிடம் புகழ்ந்து துதிக்க கூடாது சர்ச் வர கூடாது என்று நீங்கள் கூறுவிர்களா..?


2)உங்கள் வீட்டு பெண்களிடம் இருந்து பைய்பிளே சேர்ந்த வாசிக்கமாட்டிர்களா..?


3)உங்கள் மனைவியை தீட்டாக எண்ணாமல் அவர்கள் மடியில் படுத்து பைய்பிளை படித்தால் அது பெரிய பாவமா..?

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்