யோனா புஸ்தகம்
யோனா_புஸ்தகம்_பின்னனி
இஸ்ரவேலின் தேவன் எகிப்து அடிமைகளுக்கு மோசை தொடங்கி மல்கியா வரை பல தீர்க்கதரிசிகளை அனுப்பி இருக்கிறார் அவர்கள் வாழ்ந்த அந்த கால கட்டத்தில் மற்ற தேச புறஜாதி மக்களுக்கு ஏன் இறை தூதர்களை அனுப்பவில்லை..? என்ற எனது கேள்விக்கு பதில் சொல்லும் படியாக
சகோதரர் #Prince_Seppaniah அவர்கள் யோபு புத்தகத்தை வாசிக்க சொன்னார்.....
யோபு புஸ்தகத்தை அவர் எந்த விதத்தில் படித்தார் என்று தெரியவில்லை நினிவே மக்கள் இரட்சிக்க படனும் என்பதற்க்காக தான் தேவன் யோபு என்ற தீர்க்கதரிசியை அனுப்பினார் என்று நினைத்து இருக்கிறார் போல அவரின் வேத அறியாமையை பைய்பிள் வசனங்களின் அடிப்படையில் பார்ப்போம்.....
♥♥♥♥♥♥♪♪♪♪♪♥♥♥♥♥♥
யோனா என்பவரின் தகப்பனின் பெயர்
அமிதாய் இவர் ஒரு தீர்க்கதரிசி என்று பைய்பிள் கூறுகிறது👇👇👇👇👇
25 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர், தம் அடியவரும் கத்கேப்பரைச் சார்ந்த #அமித்தாயின் மகனுமான இறைவாக்கினர் யோனாவின் மூலம் உரைத்த வாக்கின்படியே, எரொபவாம், *அமாத்து கணவாய் முதல் அராபாக் கடல்வரை, இஸ்ரயேலுக்குரிய நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்*.
2 அரசர்கள் 14:25
26 *ஏனெனில் இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார்*.
2 அரசர்கள் 14:26
#யோனா_எதற்க்காக_புறஜாதி_தேசம் #சென்றான்_என்பதற்க்கு_இந்த
#வசனமே_போதுமானது....
♥மேற்கண்ட வசனத்தின் படி♥
1)அமாத்து கணவாய் என்ற இடம் முதல் அராபாக் கடல்வரை தேவனின் தேசம் இதை இஸ்ரவேல் மக்களிடம் தான் இருக்க வேண்டும் இந்த நிலப்பகுதிகளை ஒன்று சேர்க்க தான் யோனா முயற்சி செய்கிறார்...
2)யோனா தகப்பன் அமித்தாய் இஸ்ரவேல் மக்களுக்கு மத்தியில் ஒரு தீரக்கதரிசியாக இருக்கிறார்
3)யோனோ ஏன் புறஜாதி தேசங்களுக்கு சென்று எச்சரிக்கை செய்தார் காரணத்தை 2இராஜாக்கள் 14:26 படித்தலே விளங்கும்..
#இஸ்ரவேலர்களின்_துன்ப_காலத்தில் #அவர்களுக்கு_உதவி_செய்ய #அடிமையாக_வைத்து_கொள்ள_தான் #யோனா_அவர்களிடம்_சென்றார்...
♥♥♥♥♥♪♪♪♪♥♥♥♥♥
♥நினிவே பட்டத்துக்கு சென்று யோனா...♥
அந்த மக்கள் இஸ்ரவேல் தேசத்தின் உட்பட்ட இடத்தில் வாழ்ந்து வந்தால் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் எந்த பாவமான காரியங்களும் செய்ய கூடாது செய்தால் அவர்களை கர்த்தர் அழித்து போடுவார்...
#உதாரணமாக
♥மோசையே எடுத்துக்கொள்வோம்♥
மோசை முதல் முதலாக புறஜாதி தேசத்தை பிடிக்க சென்ற போது #சமாதானம் என்றே கூறுவார் 👇👇👇👇
10 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.
உபாகமம் 20:10
*சமாதனத்திற்க்கு இணங்கி வந்தால் அவர்களை #அடிமைகளாக மாற்றனும் #பகுதிகட்டுபவர்களாக_மாற்றனும்*
👇👇👇👇👇
11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.
உபாகமம் 20:11
#சமாதானத்திற்க்கு_இணங்கவில்லை #என்றால் கர்த்தரின் துனையுடன் #அழிவு_தான்👇👇👇👇
12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிகைபோட்டு,
உபாகமம் 20:12
புறஜாதி அடிமைகளுக்கு தேவனின் செய்தி ஒன்றும் செல்லாது இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் அந்நிய தேவ வழிபாடு ஒன்றும் இருக்க கூடாது..
சூனியக்காரான் இருக்க கூடாது
சிலைவழிபாடு இருக்க கூடாது
ஜோசியக்காரான் இருக்க கூடாது இது நியாயபிராமாண சட்டம் இப்படி பட்ட பல பாவ காரியங்கள் தடை செய்யபடனும் இதை தான் நிலை நிறுத்த தான் யோனா நினிவே சென்றார்....
♥♥♥♥♥♥♪♪♪♪♪♥♥♥♥♥♥
#நினிவே_ராஜா_முதல்_ஜனங்கள்_வரை #ஏன்_சாக்கு_கட்டிக்கொண்டு_உபவாசம் #இருந்தார்கள்..?
♥அதற்க்கான பதில்♥
👇👇👇👇👇
கர்த்தரை முகமுகமாய் பார்த்த #யாககோபும் சாக்கு கட்டிக்கொண்டு தூக்கம் கொண்டாடினான்...
34 தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
ஆதியாகமம் 37
1 #ராஜாவாகிய_எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
2 இராஜாக்கள் 19
31 #தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங் கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.
2 சாமுவேல் 3
இஸ்ரவேலர்கள் இப்படி துக்கம் என்ற ஒரு செய்தி வந்துவிட்டால் உடனே இவர்கள் சாக்கு கட்டிக்கொண்டு துக்கத்தில் இருந்து உபவாசம் செய்வார்கள் இப்படி செய்தால் இஸ்ரவேல் தேவன் தங்களை தண்டிக்கமாட்டார் என்பதை நினிவே மக்களும் அறிந்து இருந்தார்கள் அதனால் தான் யோனா தேவனுக்கு பயந்து உபவாசம் இருங்கள் என்று சொல்லும் முன்னே தானாக முடிவு எடுத்து நினிவே ஜனங்களும் சாக்கு கட்டிக்கொண்டு தூக்கம் கொண்டாடினார்கள்...
♥♥♥♥♥♪♪♪♪♪♪♥♥♥♥♥
#யோனா_புஸ்தகத்தின்_பாடம்
♥♥♥♥♥♪♪♪♪♪♪♥♥♥♥♥
நியாயபிராமாணத்தின்படி அந்நிய மதத்தவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அடிமையாக இருந்து கட்டுபட்டு அடிமையாக இருக்க வேண்டும்
இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் பாவம் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது
பாவம் செய்யும் புறஜாதி ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்தி தீர்க்கதரிசி முலம் வரும்
இதை தான் யோபு அதிகாராம் கூறுகிறது...
நினிவே ஜனங்கள் இரட்சிக்க பட அவர்களுக்கு எந்த வேதமும் கொடுக்கபடவும் இல்லை
பிற்காலத்தில் அவர்கள் பாவம் செய்தார்கள் ....
இஸ்ரயேலின் மிகப் பழைய கொடிய எதிரியான அசீரியருடைய தலைநகரம் தான் நினிவே
இந்த நினிவே வீழ்ச்சியைக் குறித்து தான் 'நாகூம்' என்ற நூல் பைய்பிளில் அமைந்துள்ளது கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது....
19 உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை.
நாகூம் 3:19
7 நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?
நாகூம் 3:7
Comments
Post a Comment