ஆதாமை அல்லாஹ் பாவம் செய்ய தூண்டினாரா.?

#ஆதாமை_அல்லாஹ்_பாவம்_செய்ய_தூண்டினாரா.?

*1) ஆதமின் பாவத்தால் மனித சமுகம் பூமிக்கு தள்ள பட்டதா..❓*

*2)ஆதம் அலை அவர்கள் பாவம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் விதியாக்கி இருந்தானா..❓*

🌟 *நிச்சயம் இல்லை*🌟

4736. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
*ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், 'நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?' என்று கேட்டார்கள்.* ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு *ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள்.* இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(திருக்குர்ஆன் 20:39 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் யம்மு' எனும் சொல்லுக்குக் 'கடல்' என்று பொருள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை

மேற்கண்ட ஹதிஸில் முஸா நபி ஆதம் நபியிடம் கேட்ட கேள்வி என்ன..?

*ஆதம் நீங்கள் தானே மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா❓'* என்று கேள்வி குறியுடன் சந்தேகத்தில் முஸா நபி கேட்க்கிறார்.....

அதாவது *ஆதாமின் சந்ததிகள் பூமிக்கு வந்ததற்க்கு நீர் தானே காரணம் என்று முஸா நபி ஆதாம் நபியிடம் கேட்க்கவில்லை* 

*முஸா நபியின் இந்த கேள்விக்கு❓ ஆதாம் நபியின் பதில் நான் செய்த பாவத்திற்காக தான் உலக மக்கள் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்ற பட்டனர் என்று கூறவில்லை ...*

*மாறாக ஆதம் நபி கூறியது*👇👇👇

ஆதம் அலை படைக்க படும் முன்னே மனிதர்கள் அனைவரும் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்ற படுவார்கள் என்று இறைவன் மனிதர்களின் மீது விதிக்க பட்ட ஒரு விதி ஆகும் 

*மனிதர்கள் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்ற படுவார்கள் இது மனிதர்களின் விதி என்று இதே அல்லாஹ் முன்பாக தவ்ராத்தில் கூறியும் உள்ளதாகவும் முஸா நபி கண்டும் உள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது* 

மேற்கண்ட ஹதிஸின் படி ஆதம் நபி தடுக்க பட்ட கனியே உண்ணாமல் இருந்து இருந்தாலும் பாவம் செய்யாவிட்டாலும் நிச்சயம் மனிதன் சொர்க்கத்திறக்கு உரியவன் அல்ல பூமிக்கு உரியவன் என்று தேளிவாகிறது... 

இறைவன் தீர்மாணத்தின் படி ஆதாமின் சந்ததிகள் பூமிக்கு வந்து இருப்பார்கள் ஏன் என்றால் ஆதாமின் சந்ததிகள் பூமியில் வாழ வேண்டும் என்பது இறைவனின் (சித்தம்) விதி ஆகும் ...

*இதே தான் அல்லாஹ் குர்ஆனில் இப்படியாக கூறுகிறான்....*

 30. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்'
திருக்குர்ஆன்  2:30

பூமியில் தான் ஆதாமின் சந்ததிகள் வாழ வேண்டும் என்பது தான் இறைவனின் சித்தம் என்று அறிய முடிகிறது...

இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனை வாழ்க்கை தான் ஆதனால் தான் ஆதம் படைக்க பட்டார் ஆதம் பாவம் செய்ய வேண்டும் ஆதனால் சொர்க்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பது எல்லாம் இறைவனின் சித்தம் அல்ல ..

ஆதாம் பாவம் செய்து விடக் கூடாது என்பதற்க்காக தான் அந்த மரத்தை நெருங்காதிர்கள் நெருங்கினால் பாவியாகி விடுவிர்கள் என்று முன்னதாகவே இறைவன் எச்சரிக்கை செய்து உள்ளான்...

 35. "ஆதமே! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' என்று நாம் கூறினோம்.

திருக்குர்ஆன்  2:35

*ஆதாம் பாவம் செய்து விட கூடாது என்பதற்காக மேலும் இறைவனின் ஒரு எச்சரிக்கை*

 22. ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.

திருக்குர்ஆன்  7:22

மேற்கண்ட வசனத்தின் படி ஆதாம் பாவம் செய்து விடக் கூடாது என்பதற்காக ஷைத்தான் ஆதாம் ஹவ்வாக்கு எதிரியானவன் அவனை பின்பற்றாதிர்கள் என்று முன்னதாகவே என்று இறைவன் எச்சரிக்கை செய்து உள்ளார் 

*இறைவனின் 1)கட்டளையே 2)ஷைத்தான் குறித்து எச்சரிக்கை* 

*இரண்டையும் மீறி பாவம் செய்தது ஆதாமும் ஹவ்வாவும் தான்...* 

*அவர்கள் இருவரும் செய்த பாவத்திற்க்கு அவர்களே காரணம் இறைவன் அல்ல...*

ஆதாம் ஹவ்வா செய்த பாவத்தை இறைவன் மன்னித்தான் இருந்தும் இறைவன் முன்பே தீர்மானித்த படி மனித சமுகம் பூமியில் தான் வாழ வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தின் படி அங்கு நிறைவெறியது மனித சமுகம் பூமிக்கு வந்தது *ஆதாமால் மனித சமுகம் பூமிக்கு வந்தது என்று சொல்லுவதும் தவறான கூற்றும் ஆகும்...*

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்