கிறிஸ்தவம் ஒரு வரலாற்று பார்வை

அஸ்ஸலாமு அலைக்கும் ...

ஏக ஒரே இறைவன் அர்ரஹ்மானின் திரு பெயாரால் துவங்குகிறேன்..

இந்த பதிவின் நோக்கம் இன்றேய கிருஸ்தவ சமுகம் மறுமையில் இறைவனுக்கு முன்பு நஷ்டம் அடைந்த சமுகமாக இருக்கும் ..

மிக நிண்ட வரலாறு முழுவதும் படிக்கவும் படித்த பின் உங்கள் கருத்துக்களை தேரிவிக்கவும் 

பைய்பிளின் ஆதாரத்துடன் ஒரு ஆய்வு செய்வோம்..

இயேசு கிருஸ்து தான் வாழ்ந்த காலத்தில் அவரால் நியமிக்க பட்ட பனிரண்டு சீடர்களில் இருந்து யார் போதனைகள் பெறுகிறோ அவரே மறுமையில் வெற்றி அடைவார்கள் என்று பைய்பிளில் பல இடங்களில் கூறி இருக்கிறார்..

உதாரணமாக ..

♥42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 40. மத்தேயு 10 :42

இந்த வசனத்தில் இயேசு கிருஸ்து கூறுவது தன்னுடைய சீடர்களிடம் இருந்து யாராவது போதனைகளை பேற்று அதன் படி நடந்தவர்கள் அதன் பலனை (மறுமையில்) கண்டிப்பாக அடைவார்கள் ..

இது போன்ற போதனைகள் இயேசு பல நேரங்களில் கூறியுள்ளார் தனக்கு பின் யார் இயேசுவின் சீடர்களை எற்றுக்கொண்டு சீடர்களின் படி நடக்கிறவன் எவனோ கண்டிப்பாக அவர் மறுமையில் வெற்றி பெறுவார் என்றும் இயேசு கூறியுள்ளார்..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இன்றேய கிருஸ்துவத்தை தொகுத்த பவுல் அடியார் அவரை பற்றி சிறு தொகுப்பு..

(♥ பவுல் அடியார் ♥)

♥இயேசுவின் சிலுவை சம்பவத்திற்க்கு பிறகு பதிநான்கு வருடத்திறக்கு அப்புரம் வந்து சபையில் குழப்பத்தை உண்டு பன்னிய பவுல்..

♥இயேசுவே நேரில் கூட காணாத பவுல்..

♥இயேசுவின் சிலுவை சம்பவத்திறக்கு பின்பு இயேசுவின் சீடர்களை பின் பற்றி வாழ்ந்த மக்களை கொடுமை படுத்தியும் அவர்களை கொலை செய்யவும் யூதர்களுக்கு துனையாக இருந்த பவுல்..

♥பின் காலத்தில் தன்னே அப்போஸ்தலறாக சுயமாக சொல்லிக் கொண்ட பவுல்..

♥முந்திய பல தீர்க்கதரிசிகளின்  இயேசு உள்பட முந்தைய (போதனைகளுக்கு) எதிராக போதனை செய்த பவுல்..

இன்று கிருஸ்தவர்களன் கையில் இருக்கும் பைய்பிளை பார்த்தால் இரண்டு புத்தங்களாக உள்ளது ஒன்று பளைய ஏற்பாடு அதில் மோசையின நியாயபிரமாணமும் மற்றும் பல தாவித்தின் சங்கித புத்தகமும் மற்றும் பல தீர்க்கதரிசிகளின் வரலாற்றுகள் உடைய புத்தகங்கள் உள்ளன இது யூதர்களின் வேதம் என்றும் கிருஸ்தவர்கள் கூறுவது உண்டு கிருஸ்தவகளின் வேத புத்தகம் ஆகிய புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன அதில் பதிமுன்று புத்தகங்கள் பவுள் எழுதியது இனி எபிரேயர் என்னும் புத்தகம் உள்ளது அது யார் எழுதியது என்று தேரியவில்லை ஆனால் அதுவும் பவுள் எழுதியது என்று இன்றயை கிருஸ்தவ சபைகள் கூறுவதால் பவுள் எழுதிய புத்தகம் மொத்தம் பதிநான்கு பத்தகங்களாக காணபடுகின்றன...

புதிய ஏற்பாட்டில் இயேசுவால் தேர்ந்து எடுக்கபட்ட பனிரண்டு சீடர்கள் எழுதிய புத்தகத்தை விட 27 புத்தகத்தில் 14 புத்தகம் பவுள் அடியாரின் போதனைகள் தான் அதிகம் காணபடுகின்றன கிருஸ்தவர்கள் பவுளின் போதனைக்கே என்றும் அதிக முன் துவம் கொடுத்து வருகின்றனர்..

♥பவுல் அடியார் உருவாக்கிய இன்றேய கிருஸ்தவ கொள்கை ஒரு கண்ணோட்டம்..

நம் ஆதி தந்தை ஆதமுக்கு இறைவன் விளக்க பட்ட ஒரு பழத்தை கொடுத்தார்   ஆதம் இறைவனின் கட்டளையே மீறி பாவியானார் அவரின் பாவம் அவரின் பிள்ளைகளாகிய எல்லா மனிதர்களும் பாவிகள் ஆனார்கள் மனிதர்களை இரட்சிக்க மோஸை தீர்க்கதரிசிக்கு இறைவன் நியாயபிரமாணம் என்னும் பத்து கட்டளைகளை கொடுத்தார் ஆனால் நியாயபிரமாண சட்டத்தின் படி மக்கள் நடக்காமல் மீண்டும் பாவம் செய்து வந்தனர் மக்களின் பாவத்தை தீர்க்க இறைவனின் ஒரே மகனே ஆதி பாவத்தில் இருந்து மக்களை விடுவிக்க இயேசுவின் சிலுவை பலியின் முலம்  ஆதி பாவத்தில் இருந்து இயேசு மக்ககளை விடுவித்தார் என்றும் இயேசுவின் சிலுவை பலியின் முலம் மோஸையின் நியாயபிராமாணத்தை கடைபிடிக்க வேண்டாம் என்று பவுல் அடியார் கூறுகிறார்..

♥16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.

 48. கலாத்தியர் 2 :16

இவரின் போதனைகளை பின் பற்றி வாழும் கிருஸ்தவர்கள் மறுமையில் வெற்றி அடைவார்களா என்று பவுல் அடியாரின் போதனைகளின் அடிப்படையில் இருந்தே பார்ப்போம்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
இயேசுவின் பனிரண்டு சீடர்கள் ..

இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்தும் ..

இயேசு பின் பற்றிய நியாயபிராமணத்தை குறித்தும் ..

இயேசுவின் சிலுவை மரணத்திற்க்கு பிறகு மோசையின் நியாயபிராமாணத்தை பின் பற்றி நடந்தார்களா இல்லை நியாயபிராமணத்தை இயேசுவின் சிலுவை மரணத்திற்க்கு பிறகு பின் பற்றாமல் நடந்தார்களா என்பதை முதலில் பைய்பிளில் இருந்தே ஆய்வு செய்வோம்..

இயேசுவின் சிலுவை மரணத்திற்க்கு பின்பு இயேசுவின் பனிரண்டு அப்போஸ்தலர்கள் சீடர்கள் எப்படி வாழந்தார்கள் என்று புவுள் அடியாரின் சீடர்  (♥Lukas♥) எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் என்னும் புத்தகத்தில் இருந்தும் புவுல் அடியார் எழுதிய காலத்தியர் என்னும் புத்தகத்தில் இருந்தும் ஆய்வு செய்வோம்..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

♥.. வரலாறு தொடக்கம்..

1♥)அப்போஸ்தலர் நடபடிகளில் ..

இயேசு கிருஸ்து சிலுவை சம்பவத்திற்கு பின்பு கடைசியாக இயேசு கிருஸ்து தனது (11) பதினோறு சீடர்களில் முன்பு கடைசியாக தோன்றினார் அப்போது சீடர்கள் இயேசுவின் இடத்தில்..

♥6 )அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி; ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ;யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

 44. அப்போஸ்தலர் 1 :6 

♥7 )அதற்கு அவர்; பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

 44. அப்போஸ்தலர் 1 :7 

♥8) பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

 44. அப்போஸ்தலர் 1 :8

இஸ்ரேவேல் ராஜ்ஜியம் இஸ்ரவேலர்களுக்கு எப்போது திரும்ப கொடுப்பிர்கள் என்று சீடர்கள் கேக்க இயேசு அதற்க்கு பிதா ஆகிய தேவன் அவர் எடுக்கும் தீர்மானங்களை நீங்கள் அறிய வேண்டியது இல்லை பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும் போது எருசலேமிலும் ,பூமியின் கடைசி வரை எனக்கு நீங்கள் சாட்சிகளாக இருப்பிர்கள் என்று இயேசு கூறினார் ..

அதன் பின்பு இயேசு பரலோகம் எடுத்துக்கொள்ளபட்டார் அதன் பின்னர் இயேசுவின் பதினோன்று சீடர்களும் இயேசுவின் தாய் மரியம் அவர்களும் எருசலேமுக்கு போனார்கள் 

12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத்திரும்பிப்போனார்கள்.

 44. அப்போஸ்தலர் 1 :12

இயேசு சொர்க்கத்தில் உயர எடுத்த பட்ட பின்பு இயேசுவின் சீடர்கள் செய்த முதல் காரியம் இயேசுவின் சீடர்களில் ஒருவரான் பேதுரு எழுந்து நின்று இயேசுவே காட்டி கொடுத்த யூதாஸ் தற்கொலை செய்து கொண்டார் அவரின் இடத்தில் வேறு ஒருவரை தேர்ந்து எடுக்க வேண்டும் அவர் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள் முதற்கொண்டு, இயேசுவானவர் அவர்களிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,நம்முடன் இருந்த ஒரு நபரை பனிரண்டாவது அப்போஸ்தலரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று சொல்லி மத்தியா என்ற ஒருவரை தேர்ந்து எடுத்து பனிரண்டாம் அப்போஸ்தலாராக ஆக்கினார்கள்

(பார்க்க அப்போஸ்தலர் நடபடிகள் 1: 21..26 )

எருசலேம் தேவ ஆலயத்தில் வருடத்திறக்கு ஒரு முறை நடக்கும் பெந்தேகொஸ்தே என்னும் நாள் வந்த போது இவர்கள் எல்லோரும் அங்கு போக தீர்மானித்தார்கள் அப்போது இவர்களின் எல்லாரிடத்திலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கி இயேசுவின் பனிரண்டு சீடர்களுக்கும் பல மொழிகளில் சுவிசேம் செய்ய ஒரு வரத்தை பரிசுத்த ஆவி அவர்களுக்கு கொடுத்தது இந்த பெந்தேகொஸ்தே நாளில் உலகம் முழுவதும் இருக்கிற பல மொழிகளில் பேசும் யூதர்கள் எருசலேம் தேவ ஆலயத்தில் கூடினார்கள் அப்போது பல மொழியில் சுவிசேஷம் செய்யும் இயேசுவின் சீடர்களை பல நாடுகளில் இருந்து வந்த யூதர்கள் பார்த்து ஆச்சரியபட்டார்கள் அப்போது பேதுரு எழுந்து நின்று அதிக சத்தத்துடன் யூதர்களை அழைத்து 

(பார்க்க :அப்போஸ்தலர் நடபடிகள் 2 :1முதல் 14 வரை)

இஸ்ரவேல் மக்களை மனிதனாகிய இயேசுவை கொண்டு தேவன் பல ஆற்புதங்களை புரிய வைத்து அவரை கிருஸ்து என்று வெளிபடுத்தினார் ஆனால் நீங்கள் அவரை விசுவாசம் இல்லாமல் எதிரிகளிடம் காட்டி கொடுத்து சிலுவையில் அடித்திர்கள் ஆனால் தேவன் இயேசுவே சிலுவை மரணத்தில் இருந்து உயிரோடு எழுப்பினார் இதற்க்கு இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் சாட்சியாக இருக்கிறோம் என்று பேதுரு சொல்லுவதை கெட்ட யூதர்கள் அந்த ஆலயத்திலே முவாயிரம் பேர் இயேசுவே தேவனால் அனுப்ப பட்ட கிருஸ்தவானவர் என எற்று கொண்டனர் ..

(♥இயேசுவே எருசலேம் ஆலயத்தில் கிருஸ்துவானவர் என எற்றுக் கொண்டவர்களை எருசலேம் சபை என  சொல்லுவார்கள் ..♥)

(பார்க்க :அப்போஸ்தலர் நடபடிகள் 2 :15 முதல் 47 வரை)

மறுநாள் யோவானும் ,பேதுரும் எருசலேம் தேவ ஆலயத்தில் பிராத்தனை செய்ய புறப்பட்டு போனார்கள் அப்போது தேவ ஆலயத்தில் இருந்த கால் உனம் உற்ற ஒரு மனிதரை சுகபடுத்தி நடக்க வைத்தனர் இந்த சம்பத்தை எருசலேம் தேவ ஆலயத்தில் பிராத்தனை செய்து கொண்டு இருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர் 
இதை கண்ட மக்கள் பேதுருவை சுற்றி கொண்டனர் பேதுரு பெந்தேகொஸ்தே என்ற நாளில் பேசியதே போலவே இந்த இடத்திலும் பேதுரு இஸ்ரவேல் மக்களை மனிதனாகிய இயேசுவை கொண்டு தேவன் பல ஆற்புதங்களை புரிய வைத்து அவரை கிருஸ்து என்று வெளிபடுத்தினார் ஆனால் நீங்கள் அவரை விசுவாசம் இல்லாமல் எதிரிகளிடம் காட்டி கொடுத்து சிலுவையில் அடித்திர்கள் ஆனால் தேவன் இயேசுவே சிலுவை மரணத்தில் இருந்து உயிரோடு எழுப்பினார் இதற்க்கு இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் சாட்சியாக இருக்கிறோம் என்று பேதுரு கூறினார் ...

♥♥♥♥♥♥♥♥♥♥♥

கிருஸ்தவ சகோதரர்களின் கவணத்திற்க்கு இது வரை பார்த்ததில் இரண்டு விசயங்ளை சுட்டிக்காட்டிகிறேன்...

1♥)இயேசுவின் சீடராகிய பேதுரு பெந்தேகொஸ்தே நாளிலும், எருசலேம் தேவ ஆலயத்தில் பிராத்தனை நேரத்திலும் பேதுரு இயேசு சகல மக்களின் பாவத்திற்காக சிலுவையில் பலி ஆனார் என்று கூறவில்லை மாறாக இஸ்ரவேல் மக்கள் இயேசுவே கிருஸ்து என்று எற்றுக் கொள்ளாமல் அவர் தேவதுஷ்னம் செய்கிறார் என்று சொல்லி அவரை எதிரிகளிடம் பிடித்து கொடுத்தனர் என்றே கூறுகிறார்...

2♥) இயேசுவின் சீடர்கள் இயேசுவின் சிலுவை மரணத்திற்க்கு பின்பும் யூதர்களின் (எருசலேம்) தேவ ஆலயத்தில் பிராத்தனை நடத்தியும் வந்தனர் எருசலேம் தேவ ஆலயம் என்பது யூதர்களின் நியாய பிராமணம் சட்டங்களை கடைபிடித்து வரும் எருசலேம் தேவ ஆலயம் ஆகும்  (கவணிக்க)

♥♥♥♥♥♥♥♥♥♥♥

பின்பு அவர்கள் உங்களிடம் தேவ ஆலயத்தில் சுவிசேசம் செய்து கொண்டு இருந்த போது அப்போது எருசேலேம் தேவ ஆலயத்தின் ஆசாரியர்களும்,தேவ ஆலயத்தில் சேனைத்தலைவர்களும் இயேசுவின் சீடர்களை சிறை பிடித்து அவர்களை எருசலேம் தேவ ஆலயத்தை சேர்ந்த பிராதானா ஆசாரியிடத்தில் கூட்டி கொண்டு போனார்கள் அப்போது பேதுரும், யோவனும் இயேசுவின் நாமத்தில் தான் இந்த பிறவி கால் உனம் உள்ளவன் குனம் அடைந்தான் என்று தேரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பேதுரு கூறியதும் பிராதான ஆசாரியர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இவர்களின் பின்னால் அதிக மக்கள் செல்கின்றனர் இதனால் நீங்கள் இனி இயேசுவின் நாமத்தில் மக்களிடம் சுவிசேம் செய்ய கூடாது என்று கூறி எச்சரித்து அனுப்பிவிட்டார்கள் அவர்களை தண்டிக்கவில்லை என் என்றால் நியாய பிராமண சட்டத்தின் படியே அவர்கள் நடக்கிறார்கள் எருசலேம் ஆலயத்தில் பிராத்தனை செய்கிற காரணத்தினால் இவர்களின் அதிக குற்றம் இல்லாதால் எச்சரித்து அனுப்பிவிட்டனர் ...

(பார்க்க 4 :1முதல் 21 வரை)

♥♥♥♥♥♥♥♥♥♥
இயேசுவின் பனிரண்டு அப்போஸ்தலர்களிடம் சீப்புரு தீவுயே சேந்த (♥பர்னபா♥) என்பவர் இனைந்து கொண்டார் 

(பார்க்க 44. அப்போஸ்தலர் 4 :36 )

அப்போஸ்தலர் எருசலேம் சபையில் ஐயாயிரம் மக்கள் சேர்ந்தனர்
♥♥♥♥♥♥♥♥♥♥♥

இயேசுவின் சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் மக்களிடம் இயேசுவின் சுவிசேம் செய்தும் அதிக அற்புதங்களும் செய்த்தால் மக்கள் இவர்களின் பின் பற்ற ஆரம்பித்தனர் இதை அறிந்த இஸ்ரவேலர்களின் பிரதான முப்பர்கள் மறுபடியும் இயேசுவின் சீடர்களை ஆழைத்து 
கண்டிக்க மட்டுமே செய்தனர் என் என்றால் ..? இவர்களிடம் அதிக குற்றங்கள் ஒன்றும் இல்லை மேசையின் நியாயபிரமாணத்தை கடைபிடிக்கிறார்கள் இஸ்ரவேல் மக்களும் இவர்களுக்கு அதாரவாக இருக்கிறார்கள் இதனால் இவர்களை மறுபடியும் கண்டித்தனர் அதற்க்கு பேதுரு உங்களுக்கு கிழ்ப்படிவதை காட்டிலும் நாங்கள் தேவனுக்கே கீழ்ப்படிகிறதே முக்கியம் என்று பேதுரு சொல்லியதும் இஸ்ரவேலர்களின் பிரதான மதபோதகர் (♥காமலியேல்♥) இவர்களை விட்டுவிடுங்கள் இவர்களின் போதனைகள் உன்மை இல்லை என்றால் அளிந்துவிடுவார்கள் தேவனின் போதனையாக இருந்தால் அதை உங்களால் அளிக்கமுடியாது என்று சொல்லி இயேசுவின் சீடரகளை விட்டுவிட்டார்கள் இயேசுவின் சீடர்கள் சந்தோஷம்மாக சென்று தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.

(பார்க்க : அப்போஸ்தலர் 5 :1 முதல் 42 வரை)

தேவனால் அனுப்பட்டவர் இயேசு கிருஸ்து என்று எருசலேம் மக்கள் உணர்ந்து வந்தனர் அப்போழுது கிரேக்கர்களுக்கும் எபிரேயர்களுக்கும் சிறு பிரச்சனைகள் வர இவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க இயேசுவின் பனிரண்டு சீடர்களால் ஏழு பேர்களை தேர்ந்து எடுத்தார்கள் ..

ஏழு பேர்கள்..

ஸ்தேவான், பிலிப்பு, 

பிரொகோரையும், 

நிக்கானோரையும், 

தீமோனையும், 

பர்மெனாவையும், 

யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா நாட்டை சேர்ந்த  நிக்கொலாவையும் தேர்ந்து எடுத்தார்கள்..

இந்த ஏழு பேரில் ஸ்தேவான் என்பவர் யூதர்களிடம் இயேசுவின் சுவிசேம்  சொல்ல ஸ்தேவானுக்கும் , யூதர்களுக்கும் கடும் வாக்குவாதங்கள் எற்பட்டு யூதர்கள் ஸ்தேவானே பிடித்து அங்கு வாழ்ந்த யூத ஜனங்களையும் அழைத்து யூதர்களின் வேத முப்பர்களின் முன்பு அவனை நிருத்தினார்கள் ஸ்தேவான் அழைத்து சென்ற யூதர்கள் இவன் மோஷைக்கும்
தேவனுக்கும் எதிராக பேசினார் என்று வேத முப்பர்களிடம் கூறி பொய் சாட்சிகள்  சொல்லினார்கள் இந்த இடத்தில் ஸ்வேதவான் யூத ஜனங்கள் முன்பும் வேத முப்பர்களின் முன்பும் ஆபிராகாம் காலம் முதல் வந்த எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் (♥யோகோவா♥) வேதன் செய்த விசயங்களை எடுத்து கூறினார் தேவனின் நிதியே குறித்து போதித்த தீர்க்கதரிசிகளை உங்களின் (பிதாக்கள்) முன்னோர்கள் அவர்களை நம்ப மறுத்து கொலை செய்தார்கள் இது போல் நீங்களும் இயேசுவை கிருஸ்து என நம்பாமல் கொலை செய்திர்கள் தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமல் போனீர்கள் என்றான் இதைக் கேட்ட யூத ஜனங்கள் அவன் மேல் கல் எறிந்து கொண்றார்கள் ஸ்தேவானே கொலை செய்ய முன் நின்று நடத்தியவர் தான் நம் (♥பவுல் அடியார்♥)

  அப்போ 6,7 ஆதிகாரம் வசனம் 60 வரை பார்க்க)

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பவுல் அடியார் இயேசுவின் சிலுவை சம்பவத்திற்கு பிறகு இயேசுவின் சீடர்களின் போதனைக்கு எதிராக பவுல் அடியார் இருந்து உள்ளார் என்று தேளிவாக தேரிகிறது ..

அது மட்டும் அல்ல ..

இயேசுவின் சீடர்களிடம் பரிசுத்த ஆவி அவர்களிடம் வந்த பின்பும் இயேசுவின் சீடர்கள் இஸ்ரவேலர்களிடம் மட்டுமே சுவிசேஷம் செய்து உள்ளனர் ..

கவணிக்க..
♥♥♥♥♥♥♥♥♥♥♥

பவுள் அடியார் எருசலேம் சபையே முன் நடத்தி வந்த சபை காரர்களை சிறை அடைக்க முயன்று வந்தான் அப்போழுது ஸ்தேவானின் மரண செய்தியே கேட்டவர்கள் பின்பு இயேசுவின் சீடர்களால் தேர்ந்து எடுக்கபட்ட ஏழு பேர்களும் சிதறி ஒடினார்கள் சிதறி ஒடினாலும் அவர்கள் இயேசு தேவனால் அனுப்பபட்ட கிருஸ்து என்று சுவிசேம் செய்வதை நிருத்தவில்லை அந்த ஏழு பேர்களில் ஒருவரான பிலிப்பு என்பவர் சமாரிய நாட்டு மக்களிடம் சுவிசேசத்தை பரப்பினார் அவரின் சுவிசேத்தை கேட்ட சமாரியாகாரர்கள் இயேசுவே கிருஸ்து என எற்றுக்கொண்டனர் சமாரிய நாட்டுக்கார்கள் இயேசுவின் சுவிசேசத்தை எற்றுக்கொண்டார்கள் என்று கேள்வி பட்ட இயேசுவின் சீடர்கள் யோவனும் , பேதுரும் வந்து பரிசுத்த ஆவியால் ஜெபம் செய்து அவர்களை எற்றுக் கொண்டார்கள் ..

♥கவணிக்க

சமாரிய காரர்கள் என்பது புறஜாதி மக்கள் இல்லை அவர்களும் மோஷையின் நியாயபிராமணங்களை கடைபிடித்து வருபவர்கள் தான்...

பார்க்க (8அதிகாரம் வசனம் 1முதல் 17 வரை)

♥♥♥♥♥♥♥♥♥♥

தமஸ்கு என்ற நாட்டில் இயேசுவின் சீடர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள் இயேசு தேவனால் அனுப்பட்ட கிருஸ்துவானவர் என்று தமஸ்கு நாட்டு மக்களிடம் பல ஆற்புதங்களை நடத்தி இயேசுவே பற்றி சுவிசேம் நடத்தி வந்தனர் இவர்களை பிடித்து எருசலேமில் உள்ள யூத வேத பண்டிதர்களிடம் முன் நிறுத்துவதற்காக (♥பவுள் அடியார்♥) தமஸ்கு நாட்டு யூத பண்டிதர்களிடம் அதிகாரம் பெற்று சுவிசேம் செய்து கொண்டு இருந்தவர்களை சிறை பிடித்து எருசலேம் கொண்டு போக பவுல் அடியார் தீர்மாணித்தார் அந்த நேரத்தில் தேவன் தமஸ்கு நாட்டில் தன்னக்கு  தரிசனம் ஆனார் என்றும் புற ஜாதி மக்களிடம் தேவன் சுவிசேஷம் செய்ய சொன்னதாக பவுல் அடியார்  சொல்லுகிறார் இந்த சம்பவங்களை குறித்து பவுள் அடியார் எழுதிய (48. கலாத்தியர் 1ம் அதிகாரத்தில் 11முதல் 27 வசனம் வரை மிக தேளிவாக விளக்கம் பவுல் தருகிறார்..

தேவன் தனக்கு தந்த தரிசனத்தை 
யாரிடமும் கூறவில்லை
இயேசுவால் நேரடியாக தேர்ந்து எடுக்கபட்ட பனிரண்டு சீடர்களுக்கும் கூறாமல் தேவன் தன்னே தேர்ந்து எடுத்த விசயத்தை கூறாமல் பவுல் அரேபிய தேசத்திற்க்கு சென்று மிண்டும் தமஸ்கு என்ற நாட்டிற்க்கு வந்து இயேசுவே குறித்து தஸ்க்கு நாட்டு மக்களிடம் மூன்று வருடம் சுவிசேம் செய்தார் என்றும் கூறுகிறார்..

17 எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும் அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.

 48. கலாத்தியர் 1 :17

18 மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.

 48. கலாத்தியர் 1 :18

பவுல் மூன்று வருடம் தமஸ்கு நாட்டு மக்களிடம் இயேசுவே குறித்து சுவிசேஷம் செய்து வந்தது இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) அறியவில்லை...

பவுல் அடியார் எருசலேமில் இயேசுவின் போதனைகளுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும் எதிராக நடந்தவர் என்று தமஸ்கு நாட்டு மக்கள்
ஒன்றும் அறியாதவர்களாக இருந்தனர்..் 

தமஸ்க்கு நாட்டு மக்களிடம் மூன்று வருடம் சுவிசேஷம் செய்த பவுல் அந்த சமயத்தில் தமஸ்க்கு நாட்டு யூத பண்டிதர்கள் பவுலை சிறை பிடித்து கொலை செய்ய முற்பட்டனர் தன் உயிரே காப்பாற்றி கொள்ள பவுள் அடியார் முதல் முறையாக இயேசுவின் சீடர்கள் (அப்போஸ்தலர்கள்) வாழும் எருசலேம் நாட்டிற்க்கு தப்பி ஒடிவந்தார்..
♥♥♥♥♥♥♥♥♥♥

பவுல் இயேசு சீடராகிய யோக்கோபை  பார்த்து தேவன் தன்னே கண்ட விசயத்தை கூறிய போது அவர் பவுலை நம்ப மறுத்து பவுலை கண்டு பயந்தனர் பின்பு பர்னபா என்பவர் அப்போஸ்தலர்களிடத்தில் பவுலை கொண்டு போய் நடந்த காரியத்தை விவரித்து அப்போஸ்தலர்களிடம் சேர்த்துவிட்டார் பர்னபா..

27 அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்டவிதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.

 44. அப்போஸ்தலர் 9 :27
♥♥♥♥♥♥♥♥♥♥♥

எருசலேமில் பவுல் யூதர்களிடம் இயேசுவே பற்றி சுவிசேஷம் சொல்ல யூதர்களுக்கும் ,பவுலுக்கும் பிரச்சனை எற்பட்டது இதற்க்காக பவுலை கொலை செய்ய யூதர்கள் கூடினர் 

(♥அப்போஸ்தலரின் இயேசுவின் சீடர்கள் பவுலின் சொந்த நாடான தர்சுவுக்கு பவுலை அனுப்பி வைத்தனர்♥)  

எருசலேம் சபையில் சேர்ந்த பவுல் எருசலேமில் அப்போஸ்தலர்களில் யோக்கோபை மட்டுமே பார்த்தாகவும் பின்பு யோக்கோபுடன் (15)பதினேந்து நாட்கள் மட்டுமே தங்கியதாகவும் பின்பு யூதர்களிடம் பிரச்சனே காரணமாக தர்சு நாட்டுக்கு பவுல் அனுப்பபட்டார் என்றும் 
(காலத்தியரும் 1:18
அப்போஸ்தலர் 9: 30 கூறுகிறது..)
♥♥♥♥♥♥♥♥♥♥
கவணிக்க:

இயேசுவின் போதனைகளை நேரடியாக பெற்ற இயேசுவின் சீடர்களிடம் ஒன்றாக பவுல் இருந்த நாட்கள் வேறும் 15 நாட்கள் மட்டுமே இருந்து உள்ளார் இயேசு வாழ்ந்த காலத்தில் இயேசுவிடம் நேரடியாகவும் ஒரு போதனையே கேட்டதாகவும் ஒரு ஆதாரமும் இல்லை..
♥♥♥♥♥♥♥♥♥♥

இயேசுவின் சீடர்களால் தேர்ந்து எடுக்கபட்ட ஏழு பேரில் ஒருவரான ஸ்தேவான் யூதர்களால் கொல்லபட்ட போது மிதம் இருந்தவர்கள் சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கு மட்டும் சுவிசேஷம் செய்தும் பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சென்று சுவிசேஷம் செய்தார்கள் 
(அப்போஸ்தலர் 11 :19 ) இவர்கள் அந்தியோக்கிய நாட்டில் வாழும் கிரீக் மொழி பேசும் கிரேக்கர்களிடம் இவர்கள் இயேசுவே பற்றி சுவிசேஷம் செய்தனர் இவர்களின் சுவிசேஷம் கேட்ட புற ஜாதியான கிரீக் காரர்கள் இயேசுவே தேவனால் அனுப்ப பட்ட கிருஸ்து என எற்றக்கொண்டனர் இந்த விசயத்தை எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களிடம் தேரிவித்தனர் ..

என் என்றால் முதல் முறையாக புற ஜாதி மக்களாகிய கிரீக்காரர்கள் இயேசுவே கிருஸ்து என எற்றுக் கொண்டது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது இதை கேட்ட அப்போஸ்தலர்கள் பர்னபாவே அந்தியோக்கியா நாட்டிற்க்கு அனுப்பினார்கள் பர்னபா அவருக்கு துணையாக தர்சு நாட்டில் வாழும் பவுலை தனக்கு உதவியாக இருப்பார் என்று பவுல் அடியாரையும் அழைத்து வந்தார் ..

(♥பவுல் அடியாருக்கு பர்னபா முலம் சுவிசேஷம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது ♥)

பின்னர் அந்தியோக்கிய நாட்டில் கிரீக் மொழி பேசும் கிரேக்கர்களிடம் ஒரு வருட காலம் பர்னபாவும், பவுலும் சுவிசேஷம் செய்தனர் பல அநேக மக்கள் சுவிசேஷத்தை எற்றனர் கிரீக் நாட்டவர்களை ...

(♥முதல் முறையாக புற ஜாதியான இவர்களை கிருஸ்தவர்கள் என புதிய பெயர் கொண்டு அழைத்தனர்♥)

♥♥♥♥♥♥♥♥♥♥

கிருஸ்தவ சகோதரர்களின் கவனத்திற்க்கு..

இயேசுவின் சீடர்களால் யூதர்களிடம் சுவிசேஷம் செய்யபட்ட போது சுவிசேஷம் எற்ற யூதர்களை எருசலேம் சபையே சார்ந்தவர்கள் என்றும் புற ஜாதி கிரீக் மக்கள் சுவிசேஷம் எற்ற போது கிருஸ்தவர்கள் என அழைக்கபட்ட காரணம் ..?

சற்று விரிவாக பார்ப்போம்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥
இயேசுவின் சுவிசேஷம் எற்ற எருசலேம் சபையே சார்ந்தவர்கள்  விருத்தசேதனம்பண்ணுபவர்களாகவும் , மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுபவர்களாகவும் இருந்ததால் இவர்களை எருசலேம் சபையே சார்ந்தவர்கள் என்று அழைத்தனர் ..

♥கிருஸ்தவர்கள்..

கிருஸ்தவர்கள் என்னும் அழைக்கபட்ட கிரீக் நாட்டவர்கள் இயேசு கடைபிடித்த நியாயபிராமணம் சட்டத்தை பற்றியும் முந்தையே தீர்க்கதரசிகளின் வரலாற்றுகள் ஒன்றும் அறியாதவர்களாகவும், விருத்தசேதனம் செய்யாதவர்களாக இருந்தனர் எனவே இவர்களை கிருஸ்தவர்கள் என அழைத்து வந்தனர்..

முதல் முறையாக இயேசுவின் சீடர்களின் போதனையால் இரண்டு சபைகளாக மாறியதை அவர்களால் எற்றுக் கொள்ள முடியாத நிலமைக்கு தள்ளபட்டனர்....
♥♥♥♥♥♥♥♥♥♥

இப்படி ஒரு கால கட்டத்தில் இயேசுவின் சீடர்களில் உட்பட்ட ஒரு சிலர் அந்தியோக்கியா நாட்டிற்க்கு வந்த போது அங்கு வாழும் கிரீக் மக்கள் இயேசுவின் சுவிசேஷத்தை பின் பற்றியதே அச்சிரியபட்டார்கள் ஆனால் அவர்கள் பர்னபா, பவுல் அடியாரேயும் அழைத்து  நீங்கள் கிரீக் காரர்களே மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனம் செய்யாவிட்டால்,புற ஜாதியான இவர்கள் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்று கூற இவர்களுக்கு வாக்குவாதம் எற்பட்டு பிரச்சனே உருவாகியது  இந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்து வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள் அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனை பண்ணும்படி கூடினார்கள்.

44. அப்போஸ்தலர் 15 :1
♥♥♥♥♥♥♥♥♥♥

இந்த ஆலோசனை கூட்டத்தை பவுல் அடியார் விமர்சனம் செய்வதை பாருங்கள்..

காலத்தியர் 2 : 5,6வசனங்களில்இந்த ஆலோசனை கூட்டத்தில் இவர்கள் சுவிசேஷத்தின் நிமித்தமும் அப்போஸ்தலர்களுக்கு நான் ஒரு நாளும் கிழ் படிந்ததும் இல்லை  அவர்களுக்கு இனங்கவில்லை என்றும் விரல் விட்டு என்ன கூடியவராக இருந்த அப்போஸ்தலர்கள் எனக்கு ஒன்றும் போதனை செய்யவும் இல்லை அவர்கள் எப்படி பட்டவர்களாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்று பவுல் அடியார் அப்போஸ்தலர்களை கொஞ்சம் கூட மதிக்காத நபராக இருந்தார் என்று அவரை வாக்குமுலம் தருகிறார்...

♥♥♥♥♥♥♥♥♥♥♥

இந்த அலோசனை கூட்டத்தில் அப்போஸ்தலரும் மூப்பரும் ,பர்னபாவும்,பவுல் அடியாரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடிய சமயத்தில் பல தர்க்கம் உண்டான போது அப்போஸ்தலர் ஆகிய யோக்கோபு என்பவர் புற ஜாதி மக்கள் இப்போது தான் சுவிசேஷம் எற்று உள்ளனர் இவர்களை கலங்க வைக்க கூடாது என்றும்

♥19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் (♥கலங்கப்பண்ணலாகாதென்றும்,♥)

 44. அப்போஸ்தலர் 15 :19 

 (♥கலங்கம் அடையாத படிக்கு சட்டம் கொடுப்போம் ஒரு சில கட்டளைகளை கொண்டு வந்தனர்..
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கிருஸ்தவ சகோதரகளின் கவணதிறக்கு...

இந்த ஆலோசனை கூட்டத்தில் அப்போஸ்தலர்களோ , பவுல் அடியாரோ, பரதான மூப்பர்களோ இவர்கள் யாரும் இயேசு முந்தைய பாவ பரிகாரத்துக்காக இயேசு சிலுவையில் பலி ஆனார் என்றோ அவரின் சிலுவை மரணத்தினால் மோஷையின் நியாயபிராமணம் நீக்கபட்டது என்றோ சொல்லவில்லை மாறாக புற ஜாதி மக்கள் இயேசுவே கிருஸ்து என புதியதாக எற்றுக்கொண்டு உள்ளதால் அவர்கள் முந்தைய தீர்க்கதரிசிகளின் வரலாறுகளோ அல்லது முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு இறைவன் கொடுத்த சட்டதிட்டங்கள் என்ன என்றோ அறியாத மக்களாக இருந்தனர் இறைவனால் வழங்கபட்ட நியாயபிராமான சட்டங்களை புறஜாதி மக்களை அரம்ப கட்டத்திலே முழுமையாக கடைபிடிக்க சொன்னால் இவர்கள் (பயந்து) கலங்கி விட கூடாது என்ற ஒரே காரணத்துகாக மட்டுமே குறிப்பாக புற ஜாதி மக்களின் அரம்ப கால கட்டமாக இருப்பதால் அவர்களுக்கு நியாய பிரமான சட்டங்களை முழுமையாக கொடுக்காமல் சிறிய சட்டங்களை மட்டுமே கொடுத்து உள்ளனர் ..

♥♥♥♥♥♥♥♥♥♥♥

முதல் முதலாக புற ஜாதி கிருஸ்தவர்களுக்கு எருசலேம் சபை கொடுத்த சட்டங்கள்..

28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.

 44. அப்போஸ்தலர் 15 :28 

இந்த சட்டங்களை புற ஜாதி கிருஸ்தவர்களிடம் எடுத்து சொல்லி புரியவைப்பதற்காக இரண்டு பேரை தேர்ந்தேடுத்து யூதா என்பவரையும், சீலா என்பவரையும், அந்தோக்கியா நாட்டிற்க்கு பவுல் , பர்னபா என்பவர்களுடன் அனுப்பி வைத்தனர்  ..

யூதாவும்,சீலாவும்...

புற ஜாதி மக்களிடம் கூறிய கருத்து..

24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும், நியாயாப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் (♥உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் ♥)என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

 44. அப்போஸ்தலர் 15 :24 

இந்த வசனத்தில் நமக்கு கிடைக்கும் ஒரு தேளிவான வாக்கு முலம் புற ஜாதி மக்களிடம் நியாயபிரமான சட்டங்களையும் விருத்தசேதனம் (சுன்னத்) கட்டாயமாக செய்ய வேண்டும் என்றும் சொல்லி உங்களின் ஆத்துமாக்களை கலக்கி பயமுறுத்தி உள்ளனர் இதனால் அவர்களின் கலங்கத்தை நீக்கவே தொடக்கமாக சிறிய முக்கியமான  சட்டங்களை கொடுத்து உள்ளனர் என்பதும் மிக பாரமான சட்டங்கள் ஒன்றும் அவர்கள் மிது சுமத்தவில்லைஎன்று தேளிவாகி உள்ளது..

(பார்க்க 44. அப்போஸ்தலர் 15 :19 முதல் 29 வரை)  

♥♥♥♥♥♥♥♥♥♥♥

புற ஜாதி மக்களுக்கு நியாயபிரமான சட்டங்கள் முழுமையாக கொடுக்காவிட்டலும் யூதர்களின் ஒரு சில சட்ட திட்டங்களை மட்டும் புற ஜாதி கிருஸ்தவர்களுக்கு கொடுத்து உள்ளனர் பின் கால கட்டத்தில் புற ஜாதி மக்களிடம் சுவிசேஷம் செய்வதில் பல நேரங்களில் ஒற்றுமையுடன் இருந்த பர்னபாவும் , பவுலும் ஒரு கட்டத்தில் அவர்களிடம் வாக்குவாதம் எற்பட்டு பிரிந்துவிட்டதாக சொல்லபட்டு உள்ளது ஆனால் அதற்கான காரணங்களை படிக்கும் போது அதன் சரியான சத்திய வெளிச்சம் பெறும் குழப்பமாகவே இருக்கிறது...

கலாத்தியர் 2:11,14லும்..
ஒரு காரணமாகவும் 
அப்போஸதலர் 15: 35,41ல் வேறு ஒரு காரணத்துக்காக பர்னாபா பவுலுடன் பிரிந்தார் என்று இரு வித கருத்துக்கள் நிலைவுகிறது ..

இதை சற்றுவிரிவாக பார்ப்போம்...
♥♥♥♥♥♥♥♥♥♥

கலாத்தியர் 2:11,14 வரை வசனங்களில் அப்போஸ்தலர் ஆகிய பேதுரு முதல் முறையாக அந்தியோக்கியா நாட்டிற்க்கு வந்து அங்கு வாழ்ந்த புற ஜாதி கிருஸ்தவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக பர்னபா ,பவுல் அவர்களுடன் சேர்ந்து புற ஜாதி கிருஸ்தவர்களுடன் நெருங்கி பழகியும் அவர்களுடன் இருந்து உணவு உட்கொண்டதாகவும் அந்த நேரத்தில் அப்போஸ்தலர் யோகோபு அனுப்பிய ஒரு சிலர் வருவதை உணர்ந்த பேதுரும்,பர்னபாவும் புற ஜாதி மக்களிடம் இருந்து உணவு உட்கொண்டதை நிருத்திவிட்டு அவர்களை விட்டு பிரிந்து நின்றார்கள் என் என்றால் ..?

நியாயபிராமான சட்டங்களை கடைபிடிப்பவர்கள் யூதர்கள் அல்லாத மக்களிடம் நெருங்கி பழகுவதோ அல்லது அவர்களுடன் இருந்து உணவு உட்கொள்ளவோ மாட்டார்கள் பர்னபாவும் பவுலும் பிரிந்தற்கான காரணம் என்று கலாத்தியரில் விளங்கி கொள்ளலாம் ..

கலத்தியர் 2 :14 வசனத்தில் பேதுரு புற ஜாதி மக்களிடம் இருந்து உணவு உட்கொள்ளாமல் விட்டு விலகி நின்ற சமயத்தில் நம் பவுல் அடியார் கூறுவதை கவணிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது...

♥14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச்சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர்முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்?

 48. கலாத்தியர் 2 :14 

இயேசுவின் சிலுவே மரணத்தின் பின நியாயபிரமான சட்டங்களை கடைபிடிக்க வேண்டாம் என்று பவுல் அடியார் கூறியதே நாம் மறந்து விட கூடாது ஆனால் நியாயபிரமான சட்ட விசயத்தில் அவரின் போதனைக்கு எதிராக அவரை கூறும் விசயத்தை கவணியுங்கள்...

அப்போஸ்தலர் ஆகிய பேதுருவே பார்த்து பவுல் நி யூதனாக இருக்க முதலில் நியாயபிரமான சட்டங்களின் படி நடக்காமல் புற ஜாதி மக்களை நடக்க சொல்லுவது என் என்று கேக்கிறார்...?

பவுல் சொல்லுவது முதலில் யூதர்கள் நியாயபிராமணத்தை கடைபிடிக்க வேண்டும்மாம் அதன் பின் புற ஜாதி கிருஸ்தவர்களை கட்டாய படுத்துங்கள் என்று கூறுகிறார்...

பவுலே வாக்குமுலம் தருகிறார் நியாயபிரமானத்தின் படி நடங்கள் என்று...எ

♥♥♥♥♥♥♥♥♥♥♥
அப்போஸ்தலர் 15:36,37,38,39வசனங்களில் பவுல் பர்னபாவே அழைத்து நாம் சுவிசேஷம் செய்த எல்லா நாட்டு மக்களையும் ஒரு முறை பார்த்து வருவோம் என்று அழைத்தாகவும் அதற்க்கு பர்னபா மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக் கூட்டி கொண்டு போகவேண்டும் என்றான் இதற்க்கு பவுல் அடியார் பம்பிலியா நாட்டில் யோவான் நம்மிடையே ஊழியம் செய்யவரவில்லை என்று கூறி யோவான் வேண்டாம் என்று பவுல் கூற பர்னபாவுக்கும் பவுலுக்கும் வாக்குவாதம் எற்பட்டு பிரிந்துவிட்டார்கள் என்று அப்போஸ்தல நடபடிகள் கூறுகிறது...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பர்னபாவும்,பவுல் அடியாரும் பிரிந்த விசயத்தை  பைய்பிள் இரண்டு வித கருத்துக்களை கூறி முறன் படுகிறது
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அப்போஸ்தலர் நடபடிகளில்  இயேசுவின் சிலுவை மரணத்திற்க்கு பின் நடந்த வரலாற்று சம்பவங்களை மிக தேளிவாக சொல்லபட்டு உள்ளது ஆனால் பேதுரும் , பவுல் அடியாருக்கும் அந்தியோக்கியா நாட்டில் வாக்குவாதம் நடந்து பிரிந்த சம்பவத்தை பற்றி அப்போஸ்தல நடபடிகளில் காணமல் போனது ஒரு மர்ம விசயமாகவே இருக்கிறது..

ஆனால் அப்போஸ்தல சபையும் , பவுல் அடியாரும் இரண்டாக பிரிந்த சம்பவத்தை கலாத்தியர் புத்தகத்தில் பவுல் அடியாரே விளக்கம் தந்து உள்ளார்....

♥♥♥♥♥♥♥♥♥♥♥
ஒரு கட்டத்தில் 

♥இயேசுவின் சீடர்களால் சுவிசேஷம் செய்யபட்டவர்களை எருசலேம் கிருஸ்து சபை என்றும், 

♥பவுல் அடியார்களின் அதிக்கத்தில் இருந்த அந்தியோக்கிய புற ஜாதி கிருஸ்தவர்கள் என்னும் சபையாக மாறியது 

சபைகள் இரண்டாக பிரிந்துவிட்டது ..

♥ஒன்று நியாயபிராமணங்களை கடை பிடிக்கும் கிருஸ்து சபை 

மற்றொன்று 

♥நியாயபிராமாணத்தை எடுத்து எறிந்த புற ஜாதி கிறிஸ்தவ சபை இரண்டு சபைகளாக பிரிந்த பின்னர் சுதந்திரமாக பவுல் அடியார் தொடர்ச்சியாக முன்று வருடகாலம் புற ஜாதி மக்களிடம் சுவிசேஷம் செய்து வந்தார் மறுபுரம் இயேசுவின் சீடர்களாகிய அப்போஸ்தல சபை புற ஜாதி கிருஸ்தவர்களை நியாயபிரமாண சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம்  செய்து வந்தனர் பவுல் அடியார் முன்று வருடங்கள் எருசலேம் தவிர்த்து மற்ற நாடுகளில் சுவிசேஷம் செய்து வந்தார் முன்று வருடம் களித்து பவுல் அடியார் எருசலேம் செல்ல தீர்மானித்தார்..

♥15 அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமன்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.

 44. அப்போஸ்தலர் 21 :15
♥♥♥♥♥♥♥♥
எருசலேமுக்கு பவுல் அடியார் தன் சீடர்களை அழைத்துக்கொண்டு போன பவுல் அங்கு சென்றதும் இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோக்கோபின் இடத்தில் பவுல் சென்றதும் அங்கு அப்போஸ்தலன் ஆகிய யோக்கோப்பு பவுல் அடியாரிடம் கூறிய விசயம் .. 
கிருஸ்தவர்களின் மிகவும் (♥கவணத்திற்க்கு♥)

44. அப்போஸ்தலர் 21 ; 20

யோக்கோபு பவுல் அடியாரிடம்..

சகோதரனே யூதர்கள் அநேகமாயிரம்பேர் இயேசுவே தேவனால் அனுப்ப பட்ட கிருஸ்து என எற்றும் மோஷையின் நியாயபிராமனத்தை பின் பற்றியும் வருகிறார்கள் 

44. அப்போஸ்தலர் 21:20ம் இந்த வசனத்தில் யோக்கோப்பு கூறும் வசனம் எவ்வளவு தேளிவாக இருக்கிறது கிருஸ்தவ சகோதர்ரகளின் கவணத்திற்க்கு இயேசுவின் சீடர்களின் போதனையே எற்றவர்கள் இயேசுவே தேவனால் அனுப்பட்ட கிருஸ்துவானவர் எற்றும் நியாயபராமனத்தை நிக்கம் செய்யாமல் அதனை பின் பற்றியும் விருத்தசெதனம்  செய்து வந்ததாகவும் பைய்பிளே சாட்சியாக இருக்கிறது..

இயேசுவின் சீடர்களின் போதனை நியாயபிராமன சட்டங்களை கைக்கொள்ளுவதே ஆனால் பவுல் அடியார் நியாயபிராமனத்தை பின் பற்றவில்லை என்று அறிந்த இயேசுவின் சீடர் பவுல் அடியாரிடம் (44. அப்போ 21 : 21)யோக்கோப்பு கூறுவது ..

புறஜாதி மக்களிடயும்,யுதர்களிடமும், விருத்தசேதனம் செய்ய வேண்டாம் என்றும் மோஷையின் நியாயபிராமனம் கடைபிடிக்க வேண்டாம் என்று நி போதனை செய்து வருவதை எருசலேமில் உள்ளவர்கள் அறிந்து இருக்கிறார்கள் நி இங்கு வந்து இருப்பதை அறிந்து இருந்தால் கண்டிப்பாக கூட்டம் கூடுவார்கள் அதற்காக நி ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று இயேசுவின் சீடர் யோக்கோப்பு பவுல் அடியாரிடம் ஒரு நிபந்தனை வைக்கிறார் 

♥♥♥♥♥♥♥♥

(♥கிருஸ்த சகோதரர்களின் கவணத்திற்க்கு♥)

யோக்கோபு பவுல் அடியாரிடம் வைத்த நிபந்தனை 

இயேசுவே கிருஸ்து என எற்றுக் கொண்ட நான்கு பேர் என்னிடம் உள்ளனர் அவர்கள் எருசலேம் தேவஆலயத்தில் பிராத்தனை செய்து உள்ளனர் அவர்களை நீ கூட்டிக் கொண்டு நியாயபிராமன சட்டத்திட்டத்தின் படி பவுல் அடியாரும் , அந்த நான்கு பேர்களும் நசரேய விரதம் மேற்கொண்டு எருசலேம் ஆலயத்தில் சுத்திகரிப்பு செய்தும் தலைச்சவரன் செய்தும் அந்த நான்குபேர்களின் மொத்த செலவுகளையும் நீர் எற்று கொண்டு செய்தால் எருசலேமில் உள்ள இயேசுவே கிருஸ்து என பின் பற்றி வாழும் மக்கள் நீர் நியாயபிராமனத்தை பின் பற்றி வாழுபவர் தான் என்று புரிந்துகொள்வார்கள் என யோக்கோபு கூறியதும் அதை பவுல் அடியார் மறுக்காமல் நசரேய விரதம் என்னும் சுத்திகரிப்பு சடங்கை மேற்கொண்டு எருசலேம் தேவ ஆலயத்தில் இடுபட தீர்மானித்தார்..

♥♥♥♥♥♥♥♥♥♥♥
நசரேய விரத பிராத்தனை பற்றி அறிய 
 4. எண்ணாகமம் 6 : 1...21ம் வசனம் வரை பார்க்கவும்..
♥♥♥♥♥♥♥♥♥♥♥

26 அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.

 44. அப்போஸ்தலர் 21 :26

எருசலேம் தேவ ஆலயத்தில் பவுல் அடியார் நியாயபிராமனத்தின் படி சுத்திகரிப்பு சடங்கை மேற்கொண்டு இருக்கும் நேரத்தில் (♥ஆசியா♥) நாட்டிலிருந்து வந்த யூதர்கள் பவுலை தேவாலயத்தில் கண்டனர் உடனே அவர்கள் ஜனங்கள் எல்லாரையும் கூப்பிட்டு பவுலை பிடித்து இவன் நம்முடைய வேதத்துக்கும் நியாயபிராமனத்துக்கும் எதிராக  இவன் மக்களிடையே போதனை செய்துவருகிறவன் என்று சொல்லி பின் மக்கள் ஒன்று கூடி பவுல் அடியாரே கொலை செய்ய மக்கள் அனைவரும் தீர்மானித்தனர் இந்த பிரச்சனையே குறித்து அறிந்த எருசலேம் சேனாதிபதிக்கு செய்தி வந்தது உடனே சேனாதிபதி போர் விரர்களை அங்கே அனுப்பி பவுல் அடியாரே அவர்களிடமிருந்து கைப்பற்றினார்கள்
பின்பு எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டார் பின்னர் ரோமர்கள் பவுல் அடியாரை சிறையில் அடைத்தனர்..
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

இது தான் கிருஸ்தவ கொள்கை உருவாக்கிய உன்மை வரலாறு ...

இயேசு சிலுவை சம்பவத்துக்கு பின் வந்த பவுல் அடியாரின் போதனைகள் நம்பக தன்மையாக இருந்து உள்ளதா..?

என்று ஒரு முறை கிருஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்..

பவுல் அடியாரின் போதனைகளில் எது சத்தியம்..?

1♥) அபிராஹம் தீர்க்கதரசி முலம் விருத்தசேதனம் என்னும் சட்டத்தை கொடுத்த தேவன் மோஷையின் நியாயபிரமானம் முலம் விருத்தசேதனத்தை கடமை அக்கிய தேவன் தன்னுடைய சுய போதனையில் விருத்தசேதனத்தை பவுல் அடியார் எடுத்து எறிந்தார் என்பதே உன்மை..

2♥) மோஷை தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுத்த நியாயபிரமானதே இயேசுவின் சிலுவை பலியின் முலம் கடைபிடிக்க தேவையில்லை என்றும் கூறியது உன்மையா..?

3♥) இயேசுவின் சிலுவை பலிக்கு பின் நமது பாவத்தை தீர்க்கவே இயேசு சிலுவையில் பலியானார் என்று இயேசுவின் சீடர்கள் கூறாத ஒரு புதிய சிலுவை சித்தாந்தம் உருவாக்கியது  பவுல்....

இந்த பதிவின் இரண்டாம் பாகம் இறைவன் நாடினால் விரைவில் வெளிவரும்....♥.

Comments

Popular posts from this blog

ஹவ்வா அலையினால் ஆதி பாவம் பெண்களுக்கு வந்ததா..?

கட்டாய படுத்தி திருமணம் செய்ய கூடாது...

பெண் கல்வி குறித்து இஸ்லாம்