பைய்பிளின்_தேவன்_பாவிகளை #நேசிக்கிறாரா..?

 #பைய்பிளின்_தேவன்_பாவிகளை #நேசிக்கிறாரா..?


#மனம்_திரும்பாத_பாவிகளை_எப்படி #வழி_நடத்துகிறார்..?


முழுமையான ஆய்வு....


#பொதுவாக :-


கிறிஸ்தவர்கள் #2பேதுரு3:9வது வசனத்தை கூறிப்பிட்டு எங்கள் தேவன் பாவிகள் எல்லாரும் இரட்சிக்க பட வேண்டும் என்று விரும்புகிறார் அதற்க்காக நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார் என்ற வசனத்தை காட்டுவார்கள்.....


மேற்கண்ட வசனத்தை படிக்கும் போது தேவன் அன்பானவர் தான் பாவிகள் எல்லாரும் மனம் திரும்பனும் என்பதற்க்காக இந்த உலகத்தை அழிக்காமல் வைத்து இருக்கிறார் என்பது போல் தோன்றும் இப்படி பட்ட விசுவாசம் ஒரு புறம் சரியாக இருந்தாலும் இதற்க்கு மாற்றமான தேவனின் ஒரு குணம் ஒன்று உண்டு.....


#அது 


[♥தன் வாழ்நாளில் மனம் திரும்பாமல் இருக்கும் பாவிகளை தேவன் நேசிக்கமாட்டார் என்பதே.....♥]


இதை பற்றி வசனத்தின் அடிப்படையில் சிந்தனை செய்து ஆய்வு செய்யவோ...?


அதை பற்றி வெளிப்படையாக பேசவோ..? 


கிறிஸ்தவர்கள் தயங்குகிறார்கள்......


அநேக கிறிஸ்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.....


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#பாவிகளில்_இரு_வகை_உண்டு..


1)பாவியாக இருந்து மனம் திரும்பும் பாவிகள் உண்டு....


2)தேவ செய்தி சென்றும் பாவியாக இருந்து தன் வாழ் நாள் முழுவதும் மனம் திரும்பாமல் பாவியாக வாழ்ந்து பாவியாக மரிக்கும் மனித பாவிகள் இன்று உண்டு...


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


#முதல்_ரகம் 


மனம் திரும்பும் பாவிகளை தேவன் நேசிப்பார் இது எல்லாருக்கும் தெரிந்த காரியம் தான் உதாரணமாக பல வசனங்கள் உண்டு ஒரு சில வசனத்தை கூறிப்பிடுகிறேன்.....


14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள். அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். 


ஆமோஸ் 5 :14


23 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார் அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை, கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 


சங்கீதம் 37 : 23,24


31 ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 


யோவான் 9 :31


மேற்கண்ட வசனத்தின் பொருள்


ஒரு பாவி இரட்சிக்க பட வேண்டும் என்றால் தீமையை விட்டு விலகி நன்மையே தேடினால் தேவன் அவரோடு இருந்து அவரை நேரான பாதையில் வழி நடத்துவார் அந்த பாவியின் ஜெபத்திற்க்கு செவி கொடுப்பார் என்று காண முடிகிறது....


இது மனம் திரும்பும் பாவியை தேவன் வழி நடத்தும் முறை....

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


தேவ செய்தி சென்றும் பாவியாக இருந்து தன் வாழ் நாள் முழுவதும் மனம் திரும்பாமல் பாவியாக வாழ்ந்து பாவியாக மரிக்கும் மனித பாவிகளை தேவன் வழி நடத்துவது எப்படி....?


#தேவ_செய்தி_பெற்றும்_மனம் #திரும்பாத_பொல்லாதவர்களுக்கு #தேவன்_நன்மை_செய்யமாட்டாராம்....


10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.


 24. எரேமியா 18 :10


#தேவன்_பாவியை_தீங்கில்_கவிழ்த்து_போடும்_தேவன்


12 நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப் பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். 

நீதிமொழிகள் 21:12


21 துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.


நீதிமொழிகள் 12:21


22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்: தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 

நீதிமொழிகள் 5:22


#தேவன்_பாவியை_வெறுக்கிறார்


5 கர்த்தர் துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.


சங்கீதம் 11


#தேவன்_பாவிகளின்_வீட்டை_சபிக்கிறார்


33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது


நீதிமொழிகள் 3


#தேவன்_பாவிகளுக்கு_கைகொடுக்கமாட்டார்


20 இதோ, தேவன் பொல்லாதவர்களுக்கு கைகொடுக்கிறதுமில்லை. 


யோபு 8 :20


#பாவிகளுக்கு_செவி_கொடுக்கமாட்டார்


31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்


யோவான் 9 :31


#பொல்லாதவர்களின்_ஜெபத்திற்க்கு

#மறுஉத்தரவு_கொடுக்கமாட்டார்


12 அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள். அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.


யோபு 35


#பாவிகளுக்கு_தேவனிடம்_இருந்து #சமாதானம்_கிடைப்பது_இல்லை....


22 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். 

ஏசாயா 48:22


#பாவிகளுடன்_தேவன்_நெருக்கமாக #இருக்கமாட்டார்..


29. துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்

நீதிமொழிகள் 15:29


#பொல்லாத_பாவிகளாக_இருப்பார்கள் #என்றால்_தேவன்_ஒரு_போதும் #நேசிக்கமாட்டாராம்


15 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும், அங்கே நான் அவர்களை வெறுத்தேன், அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன், இனி அவர்களை நேசிக்கமாட்டேன்

ஓசியா 9


#பூமியில்_ஒருவன்_தேவனுக்கு #விரோதமாக_பாவம்_செய்கிறான் #என்றால்_அந்த_பாவியின்_பெயரை #ஜீவ_புத்தகத்தில்_எடுத்துவிடுவாராம்


33 எனக்கு விரோதமாகய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். 


யாத்திராகமம் 32 :33


#பாவிகளை_தண்டிப்பதற்க்காக #நியாயதிர்ப்பு_நாள்_வரை_வைத்து #இருக்கிறார்.....


கர்த்தர் அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.


2 பேதுரு 2:9


30 துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான். அவன் கோபாக்கினை நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.


யோபு 21


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


தேவன் மனிதனை நேசிக்கிறவர் தான் ஆனால் மனிதன் செய்கின்ற பாவங்கள் மனிதனுக்கும் தேவனுக்கும் பிரிவினை உண்டாக்குகிறதாம்


2 #உங்கள்_அக்கிரமங்களே #உங்களுக்கும்_உங்கள்_தேவனுக்கும் #நடுவாகப்பிரிவினை_உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. 

ஏசாயா 59:2


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.


திருக்குர்ஆன்  9:80

Comments